பெட்டி தொலைஞ்சு போச்சு...!

நாம்பாட்டுக்கும் செவனேன்னு இருந்தேங்க..! ஒரு அமைப்புல இத்தனாந்தேதி ஊட்டில கூட்டமிருக்கு...4

நாள் கண்டிப்பா வந்து கலந்துக்கணும்னு சொல்லிப்புட்டாங்க..! நம்மதான் ஊட்டின்னு பெரிய எழுத்துல பெருமைப்படுவோமா..? சரி சரின்னு போனுக்கு மண்டையை ஆட்டிட்டேன்.
(அப்பெல்லாம் தெரியாது...கெரகம் கீழ்வீட்லயே குடியிருக்குன்னு..)

திடீர்னு அதுக்கு மொத நாள் ஒரு அவசர வேலையா சென்னை போகவேண்டியிருந்தது.! சரி ! நம்ம பெட்டியை தூக்கிட்டு அலைய வேண்டாமேன்னு..நேரா சென்னைலருந்து ஊட்டிக்கு வெறுங்கையா
போய்டலாம்னு தெறமையா திட்டம்லாம் போட்டு சென்னைக்குப்போய்ட்டேன்.

திட்டம் என்னன்னா.. நம்ம ஆபீஸ் பையன் ஒருத்தனை என் பெட்டி, லாப்டாப் எல்லாம் எடுத்துக்கிட்டு வாப்பான்னு கெஞ்சி கேட்டுக்கிட்டு ஊட்டி வரச்சொன்னேன். அவனும் அதே மாதிரி பஸ் ஏறிட்டான். நானும் சென்னைல வேலையெல்லாம் முடிச்சுட்டு கிளம்பி ஊட்டி போயிட்ருக்கேன்.

இப்ப....நான் சென்னை - ஊட்டி

என் பெட்டி புதுக்கோட்டை - ஊட்டி

ராத்திரி ஒரு எடத்துல வண்டி நின்னுருக்கு ! நம்ம ஆள் எறங்கி, சாப்பிட்டு வந்து பாத்தா வண்டி எஸ்கேப்.. ( பக்கத்து பஸ் டிரைவரையே பாத்துக்கிட்டிருந்தானாம்.. நம்ம வந்த வண்டி டிரைவர்ன்னு நெனைச்சு) நல்ல வேளையா லாப்டாப் கையிலேயே வச்சிருந்திருக்கான். அப்ப பெட்டி...? அவ்வளவுதான்!
அவனும் பல ஜேம்ஸ்பாண்ட் வேலையெல்லாம் பாத்திருக்கான்..! ஒண்ணும் நடக்கல..!

பெட்டியைக் காணவில்லை.....(பஸ்ஸோட போயிருச்சு..)

இனிமே கெடைக்காதுன்னு தெரிஞ்சப்புறம் எனக்கு போன் அடிச்சான். அடப்பாவின்னு அடிவயிறு கலங்க, உடனடி முடிவா இப்ப என்ன பண்றதுன்னு யோசிச்சு மேட்டுப்பாளையத்தில் இறங்கி ஒரு ஜவுளிக்கடைல பூந்துட்டேன். காலைல 8:30 மணிக்கு ஒரு ஜவுளிக்கடை திறக்கும்போதே உள்ள
நொழஞ்சு, 'இந்த மாறி..இந்த மாறி ஆனதால இந்த மாறி..இந்த மாறி' துணியெல்லாம் வேணும்னு கேக்க அது 2 நிமிஷத்தில் கடையே பரவி, தாயத்து விக்கிற கரடியை பாக்குற மாதிரி பாக்குறாங்க மக்கா...

ஆனா நல்லா கவனிச்சாங்க..! அப்புறம் கவனிக்காமலா...? ஒருத்தன் இளிச்சவாத்தனமா எல்லா உடுப்பும் , ஒரு பெட்டியும் சேத்து வாங்குறான்னா..! எப்புடியோ கையில இருந்த இருப்பெல்லாம் போட்டு..,வாங்கி...கவுரதையா ஊட்டி கூட்டத்தில் கலந்துகிட்டேன்.. எல்லாரும் ஊட்டில 'ஹனிமூன்'தான் கொண்டாடுவாங்க..ஆனா நான் மட்டும் 'சனி மூன்' கொண்டாடினேன் சாமி...!
ஆனாலும் நான் ஒரே புலம்பல்..(சகாக்களிடம்தான்.)" நான் எடுத்துவந்து தொலைச்சிருந்தாகூட பரவாயில்லை...இன்னொருத்தன் தொலைச்சதுக்கு நான் அனுபவிக்க வேண்டியதாப்போச்சே ! ன்னு...
மொத்தத்துல எப்பவும்போல அந்த கூட்டத்துலயும் சொதப்பி..(கொஞ்சம் அதிகமாவே..பெட்டியைக் காணலைங்க..அதான்..) ஒரு வழியா ஊர் வந்து சேந்தேங்க..!

சரி..அதுக்கென்னங்கிறீங்களா...? ,இனிதான் இருக்கு இனிதான திருப்பமே...!

Comments

  1. போண்டா திண்ணுகிட்டே பொட்டியை தொலைச்சதுமில்லாமே... திருப்பம் அது இதுவென்னு துப்பறியும் தும்பு சஸ்பென்ஸ் எல்லாம் வேற :-))

    எப்படியோ இத வைச்சு புதுத் துணி எடுத்தாச்சுன்னு சொல்லு...

    ReplyDelete
  2. < போண்டா திண்ணுகிட்டே பொட்டியை தொலைச்சதுமில்லாமே... திருப்பம் அது இதுவென்னு துப்பறியும் தும்பு சஸ்பென்ஸ் எல்லாம் வேற >

    அது நானா தொலைச்ச பெட்டி இல்லை..
    தானா தொலைஞ்ச பெட்டி..

    ஹா ஹா ஹா....

    ReplyDelete
  3. நம்ம ஊர் காரரா? எந்த ஏரியாங்க?

    ReplyDelete
  4. வாங்க புதுகை தென்றல்...

    தெற்கு 4ம் வீதி...

    ReplyDelete
  5. அப்படியா? நான் வடக்கு 4.

    ReplyDelete
  6. அடப் பாவமே,

    சாப்பிடறதுக்கு எதுக்கு லேப்டாப் எடுத்துட்டு போனார் உங்க ஆபீஸ் பாய்????

    //
    புதுகைத் தென்றல் said...
    அப்படியா? நான் வடக்கு 4.
    //

    நான் வடமேற்கில் ஒரு 500கி.மீ தள்ளி!!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !