என் பள்ளி நாட்களில் சங்கர் ன்னு கிளாஸ்மேட் ஒருத்தன் இருந்தான், படிக்கும்போதே ரொம்ப அலைப்பறையக்குடுப்பான். எல்லாரையும் கலாய்ப்பான். நட்புன்னா இப்படித்தான் இருக்கணும்னு லெக்சரெல்லாம் குடுப்பான்.எல்லாரையும் காலைக்காட்சிக்குபோகலாம்னு கிளப்பிவிட்டுட்டு பசங்க எல்லாம் கவுண்ட்டரில் வரிசையில் நிக்கும்போது நைஸா எஸ்கேப் ஆகி வாத்தியார்க்கிட்ட போட்டுக்குடுப்பான்.
ஏண்டா இப்படிப்பண்ணினன்னு கேட்டா...
நட்புன்னா நீங்க கெட்டுப்போறதை தடுக்கணும்டான்னு கருத்து சொல்லுவான்!
நீதானேடா கூப்புட்டன்னா,
நான் உங்களை டெஸ்ட் பண்ணினேன்னு சொல்லி டெரர் பண்ணுவான்.
அவன் நல்லவனா ? கெட்டவனா? ன்னு யோசிச்சு யோசிச்சே பசங்க எல்லாம் படிப்பை கோட்டை விடும் அளவுக்கு லந்து பண்ணுவான்.
கட் பண்ணினா...நாங்கள்லாம் +2க்கு அப்புறம் ஏதோ படிச்சு ஆளுக்கொரு வேலையில் தொத்திக்கிட்டோம்.
அது நான் சென்னையில் வேலைக்கு சேந்திருந்த நேரம்..! பட்டுக்கோட்டையில் நண்பனோட சேந்து டீ ஏஜென்ஸி எடுத்து நடத்திக்கிட்டிருந்தோம். நான் வாரம் ஒருதடவை அல்லது ரெண்டு வாரத்துக்கு ஒருமுறைன்னு போய்வந்துக்கிட்டிருந்தேன்.
அப்படி ஒருநாள் வந்தப்ப ,முருகையா தியேட்டருக்கு படம் பாக்கப்போகும்போது, டிக்கெட் கவுண்ட்டரில் கையை வுட்டா உள்ளேருந்து -நட்பைப்பத்தி ஒரு லெக்சர் கேக்குது- அட நம்ம சங்கரு! ன்னு சந்தோஷமாகி...
என்னடா இங்கன்னு கேக்க!
அது ஒரு மேட்டரு மாப்புள! ன்னான்.
என்ன மேட்டருடா?
இரு டிக்கெட் குடுத்துட்டு வந்து சொல்றேன்.
சரின்னு..படத்தின் சுவாரஸ்யத்தைவிட நம்ம நண்பன் ஒருத்தன் ஒரு தியேட்டரில் டிக்கெட் குடுக்குற அளவுக்கு வளந்திருக்கானேன்னு பெருமையா (!) அதன் பிண்ணனி தெரிஞ்சுக்குற ஆவலில் காத்திருந்தேன்.
கிடைச்ச கேப்பில் அவனைப்பாத்து என்னடான்னு கேக்க,
அது ஒரு இது நம்ம ப்ரெண்டோட தியேட்டர்...டிக்கெட் யாருமே சரியா குடுக்குறதில்லையாம் ! (அதுல என்ன சரியா குடுக்குறதுன்னு இன்னிக்கு வரைக்கும் நான் தலையைப்பிச்சிக்கிட்டிருக்கேன் )நான் கரெக்டா வேலை பாப்பேன்ல ! அதான் நான் நட்புக்காக உதவி பண்ண வந்தேன்னான்.
(உள்ளபடியே படிப்பை நிறுத்திட்டு சம்பளத்துக்கு தியேட்டரில் வேலைக்கு சேந்திருக்கான் டுபாக்கூரு)
சரிடா ! எப்படியோ நல்லா இருன்னுட்டு.....பெரிய மேட்டரா எதிர்பார்த்தது இப்படி 'சப் 'ன்னு போச்சேன்னு கவலைப்பட்டுக்கிட்டே படம் பாத்துட்டு வெளில வந்தா...மறுபடியும்
சங்கரு!
என்னடா..!
நீ எங்க தங்கியிருக்க?
இடத்தைச்சொன்னேன்.
தியேட்டருக்குள் யாரோ அழைக்க உள்ளே போய்ட்டான்.
இது நடந்து 2 மாசத்தில்..
ஒரு நாள் நள்ளிரவு...அன்று நானும் அங்க இருந்தேன். டப டபன்னு கதவு தட்டப்பட...
திறந்தால்...கையில் ஒரு பையுடன் வேர்க்க விறுவிறுக்க சங்கர் !
என்னடா இந்தக்கோலம்?
இல்ல மாப்புள ஓடிப்போறோம்.
என்னது ? ஓடிப்போறியா? எங்க ? யாரோட?
அப்பதான் சொன்னான்.
டிக்கெட் கொடுக்கும்போது உள்ள ஒரு வெள்ளைக்கை நுழைஞ்சது...அதுக்கான முகம் எதுன்னு பாக்கப்போய்...அந்தப்பொண்ணு பழக்கமாச்சு...! நான் தியேட்டர்க்காரரோட ப்ரெண்டுன்னு (எங்களிடம் சொன்ன அதே கதையை) அந்தப்பொண்ணிடமும் சொல்ல, நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சோம். இப்ப அவுங்க வூட்டுல ஒத்துக்கமாட்டேங்கிறாங்க! நாங்க ஓடிப்போலாம்னு முடிவுக்கு வந்துட்டோம். அதான் பஸ்ஸ்டாண்டுல ஒளிச்சுவச்சுட்டு வந்திருக்கேன். கோயம்புத்தூர் போலாம்னு ப்ளான் போட்டிருக்கேன்னான்.
(தொடரும்..)
Thursday, April 16, 2009
Wednesday, April 1, 2009
தயவுசெய்து பாத்துப் போங்க!
பழனி..
என்ன சார்..
ஏன்ப்பா இந்தப்பெரிய வண்டிய வச்சிக்கிட்டு
ரொம்பதூரம் வந்துட்டு போற..அதுவும் ரொம்ப பெட்ரோல் சாப்டுதுன்னு சொல்ற!
அதுனால பஸ்ஸுல வந்துட்டுப்போயேன்...பிரச்னையே இல்லை!
பரவாயில்ல சார்..நான் பாத்துக்குறேன்.
அடுத்தநாள்
சார்...
என்னப்பா பழனி..
இன்னிக்கு லீவு போடலாம்னு நினைச்சேன் ..நீங்க ப்ரான்ச்சுக்கு வரேன்னு சொன்னீங்களாம். அதுனால இன்னிக்கு வந்துடுறேன் சார்..ஆனா நாளைக்கு ஒரு நாள் லீவு வேணும் சார்!
சரிப்பா..ஆனா நான் கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன். அதுக்கு முன்னாடி பெண்டிங் வேலையெல்லாம் பாத்துடு !
சரி சார்..!
அன்று நண்பகல் வரை பழனியிடமிருந்து எந்தத்தகவலும் இல்லை.!
ஆனால் அவன் அலுவலகத்துக்கு வரவும் இல்லை!
என்ன ஆயிற்று என்று கேட்கலாமென்று செல்லுக்கு தொடர்புகொண்டால், அது அணைந்திருந்தது.
சில நிமிடங்களில் பழனியிடமிருந்து போன்..!
சார்..
என்னப்பா ! ஏன் இன்னும் ஆபீஸ் வரலை போல?
நான் ஆபீசுக்கு வந்துக்கிட்டிருந்தேன்.
சரி..
அப்ப ஒரு அம்மா குழந்தைகளோட ரோட்டை க்ராஸ் பண்ண வந்தாங்க
வண்டியப்பாத்ததும் அவங்க நின்னுக்கிட்டாங்க..ஆனா குழந்தையைப்பிடிக்காம விட்டுட்டாங்க
திடீர்ன்னு நாலுவயது பெண் குழந்தை குறுக்க வந்துடுச்சு..!
ஆஹா மோதிரப்போறோமேன்னு நினைச்சு ப்ரேக் போட்டேன். பைக்கோட கீழ விழுந்துட்டேன்.
அய்யய்யோ எதாவது அடிபட்டுருச்சா?
இல்ல சார்! ஒரு கீறல்கூட இல்லை சார்..! ஆனா அதைவிட பெரிசா நடந்துருச்சு சார்!
என்னப்பா..
அந்தக்குழந்தை மேல பைக் விழுந்துருச்சு !
அய்யய்யோ அப்புறம்..
குழந்தை பேச்சு மூச்சில்லாம கிடந்துச்சு!
ஆஹா..
உடனே எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்.
என்ன ஆச்சு!?
ஆனா ஆஸ்பத்திரியில் , குழந்தை இறந்து போச்சுன்னு சொல்லிட்டாங்க சார்!
அய்யய்யோ....என்னப்பா சொல்ற..? குழந்தை இறந்து போச்சா?
ஆமா சார்..நான் இப்ப ஜி ஹெச் சுக்கு வந்திருக்கேன். குழந்தையை போஸ்ட்மார்ட்டத்துக்காக கொண்டுபோயிருக்காங்க!
இப்ப என்ன சார் செய்யிறது?
எனக்கு கிடுகிடுவென்று ஆடிவிட்டது.
நம்மிடம் வேலைபார்க்கும் ஒரு ஊழியர், விபத்து நடந்துவிட்டது என்று சொன்னால் , பாத்துப்போகவேண்டியதுதானே என்று கூறிவிட்டு, முடிந்தால்
அவரைச்சேர்த்திருக்கும் மருத்துவமனையில் போய்ப் பார்த்துவிட்டு வரும் மனநிலையில் உள்ள நான், விபத்தில் இன்னொரு உயிர் போய்விட்டது எனும்போது ஸ்தம்பித்துப்போய்விட்டேன். அதுவும் ஒரு குழந்தை எனும்போது என்னால் சில நிமிடங்கள் அடுத்த கட்டத்தைப்பற்றி யோசிக்கவே முடியவில்லை.
உடனே போலீஸ் ஸ்டேஷனில் அவரைச் சரணடையச்சொல்லிவிட்டு,
அதற்குப்பிறகு, உள்ளூர் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிந்தவர்கள் என்பதால், அவர்களிடம் பேசி அவர்கள் மூலமாக அந்த ஊர் போலீஸ் அதிகாரிகளிடம்
பேசி, பழனி மேல் உண்மையிலேயே தவறில்லை என்பது விசாரிக்கப்பட்டு, அவர் அனேகமாக இன்று அல்லது நாளை பிணையில் வெளிவருவார்.
இந்தச்சம்பவம் சில கேள்விகளையும் பதில்களையும் தந்திருக்கிறது.
1. எப்போது வாகனத்தை வெளியில் எடுத்தாலும், விபத்து நடந்து நமக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்றுதான் நாமும் , நம் உறவினமும் எண்ணுவோம். நம்மால் இன்னொரு உயிரும் போய்விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
2. நம்மால் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு உயிர் போய்விட்டால், அது சட்டப்படி மிகப்பெரிய தவறு அல்ல! கவனக்குறைவாக வண்டி ஓட்டியதற்காக அபராதம் ரூபாய் 250 கட்டினால் போதும். குற்றவாளிக்கு பெயிலும் உடனே கிடைத்துவிடும்.
3. போலீஸாரைப்பொறுத்தவரை விபத்தில் யார் இறந்தாலும், ஒன்றும் அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அவனுக்கு சிபாரிசு இருந்தால், அவனுக்கு கொஞ்சம் சலுகைகள் அதிகம்தான்.
4. வண்டி ஓட்டிச்சென்றவன் இவன், குழந்தையை பிடித்துக்கொள்ளாதவர் அந்தத்தாய்... ஆனால் மரண தண்டனை ஏன் அந்தக்குழந்தைக்கு அளிக்கப்பட்டது ?
இது எதுமாதிரியான வாழ்வமைப்பு?
5. விபத்துகளை எதிர்பார்க்கவேண்டாம். ஆனால் நடந்துவிடாமல் தவிர்ப்பதற்கு கடைசிவரை முயற்சிக்கவேண்டும்.
தயவு செய்து...வாகனங்களை ஓட்டும்போது...யாருக்கும் எதுவும் நடந்துவிடாமல் மிகவும் ஜாக்கிரதையாக செல்லுங்கள் நண்பர்களே! எத்தனையோ குழந்தைகள் கனவுகளுடன் சாலையின் இருபுறமும் காத்திருக்கின்றன.

Wednesday, March 18, 2009
நானா...? அவ்வளவு கூலா?
நம்ம சக பதிவர்...
பல்வேறு விஷயங்களில் சர்வசாதாரணமாக
மாற்றுக்கோணம் யோசிக்கும் எங்கள் ஊர் தந்த இனிய
தென்றல்,
தமிழ்மண விருதுகளில் இடம்பிடித்த பதிவுப்புயல்
....புதுகைத்தென்றல்
திடீர்ன்னு என்மேல் இருக்கும் அன்பினாலோ,
இனிமேலாவது கூலா இருக்கணும்கிற எண்ணத்தினாலோ...இந்த பட்டாம்பூச்சி விருதை எனக்கு கொடுத்திருக்காங்க!
மிக்க நன்றிங்க!
இதுக்கு நான் தகுதியான்னு தெரியாது!
இனிமேயாவது ஒழுங்கா எழுதுறேன் !
சொன்னதுக்காக கொஞ்சம் கூல்...
வெயிலுக்கு இதமாக..!
தெரியாம குடுத்துட்டோமோ? - புதுகைத்தென்றல் மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருக்கிறார் !
காலம் கடந்தாலும்... இந்த விருதை நான் கொடுக்க விரும்பும் பதிவர்கள்॥
அவர் என் நண்பர் என்று பதிவுலகமே கொள்ளும் அன்பு எம்.எம்.அப்துல்லா
சினிமாச்செய்திகளை அலட்டிக்கொள்ளாமல் அள்ளித்தரும் முரளிகண்ணன் அண்ணன்!
விருதெல்லாம் இவருக்கு மேட்டரே இல்லையென்றாலும் நம்ப டெம்ப்ளேட் சிங்கம், டெக்னாலஜி தங்கம்...சஞ்சய் ஜி
Sunday, March 8, 2009
பெண்களே...பெண்மையே வாழ்க நீங்கள் !
காடுகளுக்குள்
கரடுமுரடாய்த்திரிந்துகொண்டிருந்த
எங்களினத்திற்கு
கனிவுகாட்டி
முரட்டுத்தனம்
நீக்கி
மென்மையாக்கி
இன்றும்
வாழ்விற்கு அர்த்தம்
காணவைக்கும்
பாட்டிகளாய்
தாயாய்
சகோதரிகளாய்
நண்பர்களாய்
உறவினர்களாய்
மகள்களாய்
வாழ்ந்துகொண்டிருக்கும்
சென்ற ஆண்டில் இருந்த பட்டியல் போக..
இந்த ஆண்டில்
வந்த
நண்பர்கள்
பூமா
கஸ்தூரி ரத்னா
விமலா குணசேகரன்
காயத்ரி
ஜெனிபர்
லிண்டா
சாந்தா ஸ்ரீனிவாசன்
விஜயலட்சுமி ராம்குமார்
நாகசத்யா
டோரதி கிருஷ்ணமூர்த்தி
தீபா ரெபி
புதிய பதிவர்கள்
சந்தனமுல்லை
ஸ்ரீமதி
மருமகள்
மஹதி
மகளாகப்பிறந்த தேவதை
சைந்தவி...
என வாழ்வை
அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும்..
பெண்களே...
பெண்மையே..!
வாழ்க நீங்கள்!
கரடுமுரடாய்த்திரிந்துகொண்டிருந்த
எங்களினத்திற்கு
கனிவுகாட்டி
முரட்டுத்தனம்
நீக்கி
மென்மையாக்கி
இன்றும்
வாழ்விற்கு அர்த்தம்
காணவைக்கும்
பாட்டிகளாய்
தாயாய்
சகோதரிகளாய்
நண்பர்களாய்
உறவினர்களாய்
மகள்களாய்
வாழ்ந்துகொண்டிருக்கும்
சென்ற ஆண்டில் இருந்த பட்டியல் போக..
இந்த ஆண்டில்
வந்த
நண்பர்கள்
பூமா
கஸ்தூரி ரத்னா
விமலா குணசேகரன்
காயத்ரி
ஜெனிபர்
லிண்டா
சாந்தா ஸ்ரீனிவாசன்
விஜயலட்சுமி ராம்குமார்
நாகசத்யா
டோரதி கிருஷ்ணமூர்த்தி
தீபா ரெபி
புதிய பதிவர்கள்
சந்தனமுல்லை
ஸ்ரீமதி
மருமகள்
மஹதி
மகளாகப்பிறந்த தேவதை
சைந்தவி...
என வாழ்வை
அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும்..
பெண்களே...
பெண்மையே..!
வாழ்க நீங்கள்!
Monday, February 16, 2009
அப்துல்லாவின் ஆணையை ஏற்று..!
நம்ம அப்துல்லாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பதிவூடகத்தைப்பற்றி, அதன் உறவு மேன்மைகளைப்பற்றி மனமார சிலாகித்துக்கொண்டிருந்தார்!
நானும் என் பங்குக்கு விலாவாரியாக விளக்கிக்கொண்டிருந்தேன். இதைப்பத்தி ஒரு பதிவு கூட போட்டிருக்கேன்ன்னு சொன்னேன்.
அப்ப மீள்பதிவா போடுங்க புது மக்கள்லாம் படிப்பாங்கன்னு சொன்னதால...
(எழுத மேட்டரோ நேரமோ இல்லைங்கிறது..வேற விசயம்..! அதை வெளீல சொல்வோமா?)
பதிவூடகம் - கொஞ்சம் மேலேதான்.!
எல்லாவகை ஊடகங்களையும் நாம் கடந்துவந்து இங்கே இளைப்பாற தொடங்கியிருக்கிறோம்.எல்லாவற்றிலும் இல்லாத சிறப்பு இதில் இருப்பதை உணர்கிறேன்.
ஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி, அதை இரசித்தவர்கள், பார்த்தவர்களின் பாராட்டுதல்களில் உள்ளது. ஒரு முதிர்ச்சியடைந்த படைப்பாளிக்கு விமர்சனத்தையும் நல்லதாக எடுத்துக்கொள்ளமுடியும்.
ஒரு புத்தகத்தில் (வெகுஜன பத்திரிக்கையில்) எழுதினால். அது எழுதியது ஒரு காலமாக இருக்கும். அது பிரசுரிக்கப்படுவது மறு காலம். அதன் பிறகு படித்தவர்களில் 2% க்கும் குறைவானவர்கள், விமர்சனமோ பாராட்டோ, அந்த பத்திரிக்கைக்கு எழுதுவார்கள். அதற்கு இவரால் பதில் போட முடியுமா என்பதும் சந்தேகமே!
அதேபோல், வானொலி - இதில் கேட்ட நிகழ்ச்சிகளுக்கான விமர்சனத்தையோ, பாராட்டையோ, உடனே அனுப்பினாலும் அவர்கள் எப்போது அதை படிப்பார்கள் என்று கூற முடியாது. அப்போது நாம் கேட்டால் நமக்கு கொஞ்சம் மகிழ்ச்சி..ஆனால் அதை வழங்கியவரிடமிருந்து பதில் கிடைப்பது மிகவும் அரிது ! (ஆனால் அந்த விமர்சனமும் நம்ம குரலில் , நாம் பேசுவதாக இருக்காது)
தொலைக்காட்சி - அதில் ஒரு நிகழ்ச்சி வழங்கினால். அதன் பின்னூட்டம் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்துவிடாது. அப்படியே வந்தாலும் , வார இறுதி விடுமுறை முடித்து...ஊரைச்சுற்றிவிட்டு, அசந்து தூங்கப்போகும் நேரத்தில் அரைமணிநேரம் படிக்கப்ப்டும். வழங்கியவர்களின் பதில்? ம்ஹூம்...
மறந்துட வேண்டியதுதான்.! (நாமே கேமரா முன் அமர்ந்து நம் விமர்சனத்தை படிக்க முடியாது)
சினிமா - படைப்பை வெளியிட்டு விட்டு காத்திருப்பார். விமர்சிக்கலாம். இதற்காக ஒரு சினிமாவே எடுக்கமுடியாது. மற்ற ஊடகங்களில்தான் விமர்சிக்கமுடியும். அதற்கும் அவரும் வேறு ஊடகங்கள் மூலம் பொதுவாக பதில் சொல்லுவார். ஒரு தனி மனிதனின் கருத்தாக விமர்சனமும் சரி, பதிலும் சரி..கண்டிப்பாக ஒலிக்காது.. ( விமர்சனத்துக்காக மட்டும் சினிமா எடுத்தால் அது பிச்சிக்கிட்டு ஓடும்)
ஓவியனின் படைப்பை ஒரு கண்காட்சியில் வைத்தாலும் , நாம் செல்லும் நேரத்தில் அவர் சாப்பிடப்போயிருந்தால், நம் விமர்சனம் அவ்வளவுதான்.!
அதையும் மீறி சொல்லிவிட்டாலும் பதிலை காதில் வாங்கிக்கொண்டு வரவேண்டியதுதான். அவருக்கும் பாரட்டுக்களை ஓவியமாக்க முடியாது. விற்கத்தான் முடியும்.
அனேகமாக எல்லா ஊடகங்களுக்கும் இருந்து வரும் சிக்கல் இதுதான்...ஆனால் வலைப்பூ என்ற பெயரில் வந்து கலக்கிக்கொண்டிருக்கும் இந்த பதிவூடகத்துக்கு மட்டும்தான் அற்புதச்சிறப்புகள் அதிகமுண்டு. மற்ற அனைத்து ஊடகங்களும் கவனிக்க ஆரம்பித்துவிட்டன.
நாம் எழுதலாம். சிந்தையில் சிந்தித்ததை நயம்பட, நம்மால் முடிந்தவரை அழகாக எழுதலாம்.
உடனுக்கு உடனே
விமர்சனம் கிடைக்கும்..
பாராட்டு கிடைக்கும்.
மாற்றுக்கோணம் கிடைக்கும்.
மீண்டும் நாம் பின்னூட்டத்தை மறுத்தோ,. நன்றி சொல்லியோ, வேறுகருத்துச்சொல்லியோ
அதே ஊடகத்தில் தொடரலாம்.
ஒரே விஷயத்தின் ஆழம் வரை செல்லலாம்.
நுனிப்புல்கள் தவிர்க்கலாம்.
படைப்பாற்றலை பெருக்கிக்கொள்ளலாம்.
உலகின் எந்தமூலைக்கும் படைப்பை அனுப்பலாம்.
அதைவிட மேலே..
நல்ல நண்பர்களை அடையலாம்.
முன்னறியாத ஊரில் முகமறியாத
பதிவர் உங்களுக்காக ஓடியாடி உதவிகள் செய்வார்.
உங்கள் உறவுகள் அதை உளம் குளிர வியந்து பார்க்கும்.
ஆக.. ஒரு படைப்பாளி விரும்பும் எல்லா அம்சங்களும் ஒருங்கே இருக்கும் இந்த
பதிவூடகம் ...கொஞ்சம் மேலேதான்.!
Saturday, February 14, 2009
இன்னிக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா?
ஒரு மொக்கைக்கவிதையை திடீர்ன்னு யூத்புல்
விகடன்ல பாத்துட்டு எழுதுன ஆள் பேர் பாத்தா , அட நம்ம பேரு!
என்னங்க நடக்குது!?
என்னய மாதிரி சின்னப்புள்ளங்க கவிதையையும்
போட்டு சந்தோசப்படுத்துற யூத்புல் விகடனுக்கு
ரொம்ப நன்றிங்கோ !
அந்த மொக்கையைப்பாக்க...இங்க போங்க!
இன்னிக்கு மட்டும் http://youthful.vikatan.com/youth/index.asp
கும்மப்போகும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிங்க! :)
Wednesday, February 11, 2009
சிதறிடுச்சு..!
இதோ இந்த விஷயத்தை எழுதிடலாம்னு யோசிச்சு திரும்பிப்பாத்தா ரொம்ப நாளா ஆயிருக்கு!
மனசுல ஒரு விஷயம் தோணும்போதோ, ஒரு நிகழ்வு நம்மை எழுதத்தூண்டும்போதோ உடனே பதிவா எழுதிடலாம். அப்படியும் சில
வேலைகள் நம்மை எழுத விடாமல் செய்துவிடுகின்றன.
அப்படித்தான், சென்றமாதம் முதல் , இந்த வாரம் வரை CRY (Child Rights and You) நடத்திய போட்டிக்காக , இருபது நிமிட ஆவணப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து, அதற்காக அலைந்து திரிந்து , காட்சிகள் சுட்டு, எடிட்டிங் முடித்து, அதை சமர்ப்பித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் இத்தனை நாள் ஓடியிருக்கிறது.
இதில் இன்னொரு சேதியும் இருக்கு! அந்தப்போட்டிக்கு அனுப்பப்பட்டிருந்த மத்த படங்கள் நம்ம படத்துக்கு போனா போகுதுன்னு விட்டுக்கொடுத்துட்டாங்களா, இல்லை அந்த குலோப்ஜாமூன் விளம்பரம் மாதிரி கலந்துக்கிட்டதே ரெண்டுபேரான்னு தெரியலை! நம்மை முதல் தகுதிக்கு தேர்வு பண்ணியிருக்காங்க!
அது முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் செய்திருந்ததால், எனக்கே முழுத்திருப்தி இல்லை. தமிழ்ல இன்னும் ஆழமா செய்திருக்கலாமோன்னு தோணிச்சு!
இந்தியாவால் நமது குழந்தைகளுக்கு கல்வியளிக்க இயலுமா? ன்னுதான் கேள்வி.! நேரமிருந்திருந்தா பதிவில் ஒரு விவாதம் வச்சு முடிவெடுத்திருக் கலாம். நிறைய பேரை பேட்டியெடுத்து, குழந்தைகளின் தரத்தை சோதிச்சு, அவுங்க மனநிலையையும் கேட்டுக்கிட்டு , ஒரு முடிவுக்கு வந்து படத்தை எடுத்து முடிச்சோம்.
அதுக்கு, நீண்ட யோசனைக்குப்பிறகு ஒரு தலைப்பு வச்சேன். 'EDU-CAN-DIA' ங்கிறதுதான் அது.. ! வேற ஒண்ணும் இல்லை! தலைப்பிலேருந்தே மேட்டரை எடுத்து , முடிவு என்னங்கிறதையும் சூசகமா சொல்றமாதிரி இருக்கணும்னுதான் இப்படி வச்சது..!
தலைப்பு நடுவர்களுக்கு பிடிச்சுப்போச்சாம். (தலைப்புக்கும் அவுங்களுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்திருக்கும்போல! ) :)
இப்படியே இவ்வளவு நாள் ஓடிக்கிட்டிருக்கும்போதே,
மகனுக்கு பள்ளிக்கூடத்தில் மாறுவேடப்போட்டிக்கு சர்தார்ஜி வேடம்தான் போடணும்னு தங்கமணி அடம் பிடிச்சதால, ஒரு பியூட்டி பார்லரில் போய் நின்னா, சுத்தி சர்தார்ஜியா திரியுது...! இந்த வேஷம்தாங்க யாரும் போடமாட்டாங்க...- இது , கூட்டிச்செல்வதற்கு முன்னால்,தங்கமணி அடித்த டயலாக். நான் சொன்னேன். ' இதே டயலாக்கை இவ்வளவு அம்மாக்கள் சொல்லியிருப்பாங்க போல' :)
பைக்கில் போய்க்கிட்டிருக்கும்போது, எதிர் சாரியில் வந்த பஸ் ஒண்ணு மெதுவா வரும் லாரியை ஓவர் ட்டேக் செய்ய என் வழி முழுசையும் அடைச்சிக்கிட்டு வர, என்னால் இடது புறம் திடீர்ன்னு இறங்கமுடியாது. இரண்டடி பள்ளம்...! நடு ரோட்டில் வண்டியை நிறுத்தி இறங்கி நின்னுட்டேன். வேகமா வந்த பஸ் என்னை இடிப்பதுபோல் வந்து நிற்க, டிரைவர் அவருக்குத்தெரிந்த எல்லா தகாத வார்த்தைகளையும் பிரயோகிக்க, உன் ஓவர் டேக் ஆசைக்கு யார் உயிர் போனாலும் பரவாயில்லையா? ன்னு கேட்டு விட்டேன் ஒண்ணு செவுட்டுல! ஹைவே பேட்ரோலுக்கு தகவல் கொடுத்து , அவர்கள் டிரைவரை திட்டி அனுப்பும் வரை நான் வண்டியை நகர்த்தவில்லை! அன்னிக்கு நிம்மதியா தூங்கினேன்..! :)
முத்துக்குமரன் தீக்குளிப்பு, தமிழினத்தலைவரின் டகால்ட்டித்தனங்கள், மற்ற தலைவர்களின் டுபாக்கூர்த்தனங்கள், மத்திய அரசின் மரண மௌனம், ஒற்றைக்குரலெடுத்து ஓங்கிக்கத்த முடியாத நாம் என்று உலகம் அமைதிக்காக கதறிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் சூத்திரதாரியாக இருக்கும் ஆளைக்கொல்லப்போகும் தோட்டாவாகவாவது பிறந்திருக்கலாம்...! :(
Subscribe to:
Posts (Atom)
இறைவி - எண்ணங்கள் எனது !
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...
-
இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிர...
-
இன்று படத்தை முழுமையாகப்பார்த்தாகி விட்டது.அருமையாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்த...
-
இரண்டு மிக்ஸிகளைப்போட்டு ஒரு பேரீச்சை வாங்கின கதையான்னு நினைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு… மறுபடியும் ...