விடுமுறைக்காலம் துவங்கிவிட்டது.. தன் வீட்டுப்பிள்ளைகளை
எந்த கோடைக்காலப் பயிற்சியில் சேர்க்கலாம் என்று பெற்றோர்கள் பிய்த்துக்கொண்டுள்ளார்கள்.
அதை வைத்து எத்தனை எத்தனை பயிற்சிகள்..? ஒரு பிட்நோட்டீஸ் பார்த்தேன்..
கையெழுத்துப்
பயிற்சி,
கலர்
அடிக்கும் பயிற்சி,
காசு
எண்ணும் பயிற்சி,
பூஜை
செய்யப் பயிற்சி,
புத்தகம்
படிக்கும் பயிற்சி,
பாட்டுப்பாடும்
பயிற்சி,
படம்
வரையப் பயிற்சி,
பறவை பார்க்கப் பயிற்சி
போட்டோ
எடுக்கப் பயிற்சி,
முதலுதவிப்
பயிற்சி,
பொருள்
அடுக்கப் பயிற்சி
இசை
கேட்கப் பயிற்சி
இசை
வாசிக்கப் பயிற்சி
சதுரங்கப்
பயிற்சி
சக்கரக்கால்
பயிற்சி
சோறு
உண்ணப் பயிற்சி
யோகா
பயிற்சி
அபாக்கஸ்
பயிற்சி
என்று
ஒரு மாதத்தில் பசங்களை மிகப்பெரிய வல்லுநராக்கும் முயற்சியில் ஆங்காங்கே முளைத்துள்ள summer camp ல் சேர்க்கத்
துடிக்கிறார்கள்.
இதில் ரொம்ப காமெடி..குழந்தைகளோடு பழகும் பயிற்சி...ஹலோ அதை குழந்தைகள்தான் கத்துத்தரணும்..பெரியவர்கள் என்னத்தை கற்றுத்தரப்போகிறார்கள்? அப்பனிடம் இருது, 2500 ரூவா வாங்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று புலனாகியது.
விடுமுறையில் வில்லனாகும் பெற்றோரை எப்படி கதற விடலாம் என்று சிந்தித்துக்கொண்டே
சிறார்கள் சாலையைக் கடப்பது கண்கூடாகத் தெரிகிறது. இவர்களுக்கு பள்ளிக்கூடமே தேவலை..
இந்த லீவு விட்டிருக்கவே வேண்டாம் என்று நினைக்கும் வண்ணம் டார்ச்சரை அனுபவிக்கிறார்கள்.
பெற்றோரின் ஒரே பிரச்னை.. ஒரு மாசம் வீட்டில் இருந்தால்,
வீடே ரெண்டு செய்வார்களே என்றுதான்.!! அதற்குத்தான் பிள்ளைகள். ! அதை சகிக்கும் வகையில்
ஆக்கிக்கொள்ளும்போதுதான் நம் வாழ்வு இனிக்கும்.! அதைவிடுத்து பயிற்சியில் சேர்த்தே
கொல்லும் கலாச்சாரம் பயமுறுத்துகிறது.
நான் என் பையனை போடா! போய் கிராமத்துல ஒரு
மாசம் நல்லா புழுதில விளையாடிட்டு வா என்று அனுப்புகிறேன்..! பார்த்துக்கொள்ள இருதரப்பிலும்
அன்புநிறை பாட்டி, தாத்தாக்கள் இருக்கிறார்கள். உறவுகளைக் கற்றுக்கொள்ளட்டும்.. சம்மர் கேம்பில் சக்கரக்கால் ஓட்டக்கற்றுக்கொண்டு அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை. மனிதம் பழகட்டும்.
அவர்களை பயிற்சிக்கு அனுப்புவது இருக்கட்டும்..!
குழந்தைகளிடம் நாம் கற்க வேண்டிய அன்புப் பயிற்சியை எந்தக்கோடையில் கற்றுக்கொள்ளப்போகிறோம்?
********************************************************************
சென்ற
மாதத்தில் கன்னாபின்னாவென்று வேலை ! மூன்று திரைப்படங்களுக்கு திரைக்கதை பின்னுவதிலும்,
ஒரு புத்தகம் எழுதுவதிலும் ஆழமாகக் கழிந்தது. இதற்கிடையே பயிற்சி வகுப்புகள் வேறு!
மே
ஒன்றாம் தேதி. .தொழிலாளர் தினத்தில் சத்தியம் தொலைக்காட்சியில் தொழிலாளர்களுக்குரிய
உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் அதைச் சரியாகப்பயன்படுத்தவில்லை என்ற விவாதத்தில் பங்கெடுத்தேன்.
சுவாரஸ்யமாகச் சென்றது.
என்
வாதம் இப்படி இருந்தது. : அரசு தொழிலாளர்களுக்கான நடைமுறைகளையும், உரிமைகளையும் வகுத்த்துக்கொடுத்துள்ளது.
அதை நியாயமான முறையில் கேட்டுப்பெற தொழிலாளர்களிடையே ஒற்றுமை இல்லை. ஆகவே நிர்வாகங்கள்
மகிழ்ச்சியாக விளையாடுகின்றன. அதற்காக ஒட்டுமொத்த நிர்வாகங்களையும் குறை சொல்வதற்கில்லை.
சில நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களை மிகவும் சிறப்பாக நடத்துகின்றன என்று பதிவு செய்தேன்.
தொழிலாளர்களை போலீஸ் அடிக்கிறது என்ற வாதத்துக்கு, அவர்களும் ஒரு வித தொழிலாளர்கள்
என்பது தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களால் சங்கம் தொடங்கமுடியாது என்றேன். முக்கியமாக
எதையுமே கேட்டால் கிடைக்கும் என்று வலியுறுத்தினேன். கம்பேனி விளம்பரத்தை அப்புறம்
எப்படித்தாம்பா செய்யுறது என்று நினைத்தாலும்.. ஒரு உண்மை பரவட்டுமே என்றுதான்..
அடுத்து வரும் வாரங்களில் ஒரு திங்கள்கிழமை
காலை 8 மணிக்கு நான் பங்குபெற்ற சந்தித்த வேளை நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது.
*******************************************************************
நானோ
, யாரோ அந்தக்காரை வாங்கியிருந்தாலும், உடனே ’ஓ..அதுவா?’ என்று கேட்கும் வழக்கம் அதிகமாகிவிட்டது.
ஆம்.. அதில் ஏறாமலோ, அதை ஓட்டிப்பார்க்காமலோ இருப்பவர்கள்தான் அதைக் குறை சொல்கிறார்கள்.
உள்ளே மிகவும் ரிலாக்ஸாக உட்கார முடிகிறது. ஆட்டோ போல் குறுகிய பாதைகளில் ஓட்ட முடிகிறது.
ஓட்டுவதற்கு நன்றாக இருக்கிறது. மைலெஜும் 20 வருகிறது. பப்பாளி ஆரஞ்சு வாங்கியிருக்கிறேன்.
பெயர்தான் நானோ என்று இருக்கிறதே ஒழிய.. கார் மெகா தான்..!! விலையும் கொஞ்சமில்லை.
ரோட்டில் ஏற்றும்பொழுது 2.6 லட்சம்!
காரில்
பிரச்னை இல்லை! அது என்னை வந்தடைவதற்குள்… ஒரு கேட்டால் கிடைக்கும் நடந்துவிட்டது.
அடுத்த பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது.
*******************************************************************
வாயுதூதனின்
வாஞ்சையால், சென்னையில் மின்வெட்டு இல்லாமல் இரண்டு நாட்கள் கழிந்துவிட்டது.. என்று
அவர் பீஸைப்பிடுங்குவார் என்று தெரியவில்லை. அரசு செய்யததை இயற்கை செய்கிறது….. இப்போதுகூட
அதைப் புரிந்துகொள்ளாவிட்டால்….சுனாமிதான்..!
*******************************************************************
மே
மாதத்தில் 7 ம் தேதியிலிருந்து 20 நாட்கள் வட இந்தியப் பயணம், ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர்,
ஜார்க்கண்ட், பீஹார், ராஜஸ்தான் என்று பல்வேறு மாநிலங்கள்… பல்வேறு மின் உற்பத்தி நிலையங்கள்!
ஒரே வேலை! பயிற்சி வகுப்புகள்..!!
வாணலியிலிருந்து
தப்பித்து…அடுப்பில் விழாமல் இருக்கவேண்டும்! J
நான் அவர்களைச் சொன்னேன்.. !

