காட்சி 5 - அரண்மனை அந்தப்புரம்
( புவன், இளவ்ரசி விண்டோ மகாலெஷ்மி)
புவன் : இளவரசி ! இளவரசி!
இளவரசி : யாரது?
புவன் : நான் தான் புவன்! தங்கள் லேப்டாப் வேலை செய்யவில்லையென்று வரச்சொல்லியிருக்கிறார்கள்.
இளவரசி : ஓ..நீங்களா வாருங்கள் ! (மனதுக்குள்) ...ஆஹா..என்ன ஒரு கம்பீரம்?. கண்களில்தான் என்ன ஒரு ஒளி..நிச்சயம் இவன் ஒரு பெரிய புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும். நான் இணையத்தில் பார்த்த சிறந்த ஆண்களைவிட நன்றாக இருக்கிறானே!
புவன் இளவரசி..இளவரசி!
இளவரசி (சிந்தனை கலைந்து) ஆ..என்ன? என்ன?
புவன் இல்லை..லேப்டாப் எங்கே ..என்ன பிரச்னை என்று கேட்டேன்.
இளவரசி ஓ....இதோ உள்ளே இருக்கிறது எடுத்துவருகிறேன். வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது அப்படியே நின்றுவிட்டது.
புவன் சரி..கொண்டுவாருங்கள் ! பார்த்துத்தருகிறேன்.
(இளவரசி லேப்டாப்பை கொண்டுவருகிறாள். புவன் அதைப்பார்க்கிறான்)
இளவரசி : ஆமாம்.. நீங்கள் தண்டனையில் இங்கு வேலை பார்ப்பதாக தந்தையாரும், மந்திரியும் பேசிக்கொண்டிருந்தார்களே..! என்ன குற்றம் செய்தீர்கள்..!
புவன் நான் ஒரு குற்றமும் செய்யவில்லை ! தங்கள் தந்தை செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டேன் அவ்வளவுதான்.
இளவரசி என் தந்தையைப்பற்றி என்னிடமே குறை கூறுகிறீர்களா? அவர் என்ன குற்றம் செய்தார்!?
புவன் நீங்கள் கோபித்துக்கொள்கிறீர்கள். வேண்டாம் விட்டுவிடுங்கள்.
இளவரசி சரி..சரி..சும்மா சொன்னேன்...விஷயத்தைச்சொல்லுங்கள்
புவன் தங்கள் தந்தையின் தவறான கொள்கைகளால், நாட்டில் விவசாயமே கிட்டத்தட்ட இல்லை! நீர் விலைகொடுத்து வாங்குகிறோம். உணவுப்பொருட்களின் விலையோ பல ஆயிரங்களில் உள்ளது.
இளவரசி மின்னணு சாதனங்களும், வாகனங்களும்தான் மிகவும் விலை மலிவாகக்கிடைக்கிறதே! சென்ற ஆண்டுகூட விமானத்தின் விலையை சாமனியர்களும் வாங்கும் வண்ணம் 1லட்ச ரூபாய்க்குக் கொண்டு வந்து விட்டார் என் தந்தையார்.
புவன் இளவரசி! நீங்கள் தெரிந்து பேசுகிறீர்களா? தெரியாமல் பேசுகிறீர்களா என்று தெரியவில்லை! நீங்கள் கூறும் சாதனங்களையும், வாகனங்களையும் சமையல் செய்து உண்ணமுடியாது அல்லவா?
இளவரசி புரிகிறது. உங்களைச் சீண்டிப்பார்த்தேன். என் தந்தையின் இந்த முடிவுகளில் எனக்கும் உடன்பாடு இல்லைதான்..ஆமாம்.இதில் உங்கள் குற்றம் எங்கே வருகிறது?
புவன் அதான்... சொல்லவந்தேன். உணவுப்பொருட்களை வாங்கவே முடியாமல் மக்கள் தவிக்கும் நேரத்தில், வருமான வரியை 80 சதவீதமாக்கி வாழவே வழியில்லாமல் செய்துவிட்டார். என்னால் கிடைக்கும் வருவாயில் என் வயதான பெற்றோருடன் வாழமுடியவில்லை. ஆகவே வருமான வரி கட்டமுடியாது என்றேன்.
இளவரசி ஓ...அப்படியா? உங்கள் சிரமம் எனக்குப்புரிகிறது. ஆனால் நாடே இந்த நிலையில்தானே உள்ளது.
புவன் அதற்குத்தான் ஒரு யோசனை சொல்ல வந்தேன். அதற்குள் என்னை பேசவிடாமல் செய்து இந்த தண்டனை கொடுத்துவிட்டார்.
இளவரசி இதை ஏன் தண்டனை என்று நினைக்கிறீர்கள்.? என்னைச்சந்திக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக நினைத்துக்கொள்ளுங்களேன். உங்கள் பிரச்னைகளை தந்தையாரிடம் பக்குவமாக எடுத்துச்சொல்லி உங்களை விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன்.
புவன் மிக்க நன்றி ! நீங்கள் இவ்வளவு நல்லவராக இருப்பீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை இளவரசி!
இளவரசி நீங்களும் ஒரு நல்ல சமூக சிந்தனை உள்ளவராக இருக்கிறீர்களே அதுதான் எனக்கும் பிடித்திருக்கிறது..ஆமாம்...நம்நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்?
புவன் அதுவா...! இப்போதே தரிசு நில மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கி விவசாயத்தை ஊக்குவிக்கவேண்டும். மீண்டும் மரங்களைக்கொண்டுவர நாட்டுக்கு ஒரு காடு என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விவசாயப்படிப்புகளுக்கு அரசு உதவித்தொகை தரவேண்டும். நீர் ஆதாரங்களைப்பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவற்றைச்செய்தால் கண்டிப்பாக மீண்டும் நம் இயற்கை வளங்களை நாம் அடையலாம்.
இளவரசி ஓ..நல்ல யோசனையாக இருக்கிறதே..! நானும் இன்று அதுபற்றிய தகவல்களைத்தான் இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த லேப்டாப் மூச்சை விட்டுவிட்டது.
புவன் அது மூச்சுவிட்டதும் நல்லதற்குத்தான். இல்லையென்றால் உங்களை நான் சந்தித்திருக்க முடியாது.
இளவரசி அதைத்தான் நானும் சொன்னேன்.
புவன் இதோ உங்கள் லேப்டாப் தயாராகிவிட்டது.
இளவரசி பரவாயில்லை. நல்ல அருமையான கணிப்பொறி வல்லுநர்தான் நீங்கள்..! பேசிக்கொண்டே சரி செய்துவிட்டீர்களே?
புவன் உங்கள் முன்னால் இதெல்லாம் சாதாரணம் இளவரசி!
இளவரசி அது என்ன இளவரசி!? பெயர்சொல்லித்தான் கூப்பிடுங்களேன்...விண்டோ மகாலெஷ்மி என்று அழகாக!
புவன் அதில்லை..! நீங்கள் இளவரசி! நான் ஒரு சாதாரணன்!
இளவரசி ஆனால் நீங்கள் என் இதயத்தில் குடியிருக்க ஆரம்பித்துவிட்டீர்கள்.ஆகவே இனி சாதாரணன் என்று சொல்லாதீர்கள்.
புவன் என்னது? கண்டதும் காதலா?....!!!
:) (இதே கொலைவெறியுடன் ,தொடரும்)
Tuesday, September 22, 2009
Saturday, September 19, 2009
டெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 2
காட்சி 3 அந்தப்புரம்
( மன்னரின் மனைவி லினக்சி, மகள் விண்டோ மகாலெட்சுமி, தோழி ஐபாட் அம்புஜம்)
மகாராணி : மகளே விண்டோ மகாலெட்சுமி ! எப்போது பார்த்தாலும் கணிப்பொறி முன்னாலேயே அமர்ந்திருக்கிறாயே..! அப்படி என்னதான் பார்த்துக்கொண்டிருக்கிறாய்!
மகள் விண்டோ மகாலெட்சுமி : அம்மா ! நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று இணையத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
மகாராணி அப்படி எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்!?
இளவரசி : அப்போது பல விஷயங்கள் மிகவும் அதிகமாகக்கிடைத்திருக்கின்றன அன்னையே!
மகாராணி என்னனென்ன அதிகமாகக்கிடைத்திருக்கின்றன?
இளவரசி இப்போது நமது அருங்காட்சியகத்தில் உள்ளனவே மரங்கள் என்பவை! அவை அதிகமாக இருந்திருக்கின்றன. அடுத்து நீர் ! நாம் கூட சென்ற ஆண்டு அண்டை நாட்டிடம் போரிட்டு வென்றோமே!
மகாராணி ஆம்..ஆம். ஆனால் அதில் நாம் போரிட்டது ஒரு அண்டா குடிநீருக்காக..அவர்கள் பதுக்கிவைத்திருந்து ஏய்த்துவிட்டார்கள். போரின் முடிவில் ஒரு குடம்தான் கிடைத்தது.அதிலும் அரைக்குடம் தண்ணீர்தான் இருந்தது.
இளவரசி ஆம்..அம்மா..அந்த நீர் அதிகமாக இருந்திருக்கிறது. மேலும் விளைநிலங்கள் எனப்படும் நிலப்பரப்பு அதிகமாக இருக்கிறது. அவை அனைத்தும் பசுமையாக இருந்திருக்கிறது.
மகாராணி : ஆமாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் நம் மூதாதையர் செய்த பெருந்தவறுகளினால், உலகமே பாலையாகிவிட்டதே! என்ன ஒன்று....நாம் டெக்னாலஜியை வைத்து பிலிம் காட்டிக்கொண்டிருக்கிறோம்.
இளவரசி : அம்மா! ஆம்...பிலிம் என்றதும் நினைவுக்கு வருகிறது.அந்தக்காலத்தில் மக்கள் தொலைக்காட்சி என்ற பெட்டியிலேயே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார்கள்.
தோழி அது எப்படி ஒரு பெட்டியில் வாழ்க்கையை ஓட்டியிருக்கமுடியும்..?
இளவரசி வாடீ ஐபாட் அம்புஜம்! எப்படி இருக்கிறாய்? எப்படிப்போய்க்கொண்டிருக்கிறது உனது ரோபா மேனேஜ்மெண்ட் வாழ்க்கை?
தோழி நாளொரு டேட்டா லாஸும், பொழுதொரு ப்ரோக்ராம் எரருமாக அமோகமாகப்போய்க்கொண்டிருக்கிறது இளவரசி! ஆமாம்...ஏதோ பெட்டியைப்பற்றி சொன்னீர்களே! அது என்ன?
இளவரசி நமது மூதாதையர் வாழ்வின் பெரும்பகுதியை தொலைக்காட்சி எனும் பெட்டியைப் பார்ப்பதிலேயே கழித்திருக்கிறார்கள். அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்.
தோழி ஓ..அப்படியா? இப்போதுதான் அது உருமாறி...டிஜிட்டல் டிவியாகி விபாட் என கையடக்கமாக வந்துவிட்டதே! என் அன்னையார் கூட பல நூறாண்டுகளாக அதில் வந்துகொண்டிருக்கும் ஒரு மெகா சீரியலைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இளவரசி ஆமாம். ஐபாட்.! நம் மூதாதையர் விட்டுச்சென்ற ஒரே விஷயம் மெகா சீரியல்தான்! என் அன்னையும் ஒரு மெகாசீரியல் பிரியைதான். இரவு 9 மணிக்கு அவர் யாரிடமும் பேச மாட்டார். அவருண்டு அவர் வி பாட் உண்டென்று இருந்துவிடுவார்.
தோழி அதெப்படி மகாராணி! நீங்கள் பிறப்பதற்கு முன்னால் வந்த ஒரு மெகா சீரியலின் கதையை தெரிந்துகொள்கிறீர்கள் ?
மகாராணி என்ன இப்படி கேட்டுவிட்டாய்? என் அன்னையார் நான் வளரும்போது அமுதுடன் சேர்த்து மெகா சீரியலின் கதையையும் சேர்த்து ஊட்டிவிட்டார். நான் உன் தோழிக்கு சிறுவயது முதலே கதை சொல்ல முற்படும்போதெல்லாம் ஓடிவிடுகிறாள்.
இளவரசி அதில்லை ஐபாட் அம்புஜம்! இந்த வகை சீரியல்களை எந்த நூற்றாண்டில் பார்த்தாலும் கதை சுலபமாகப்புரிந்துவிடும். இதை ஏதோ இதிகாச புராணங்களைக்கற்றுக்கொள்வதுபோல் பார்க்கவைப்பது என்னால் சகிக்கமுடியவில்லை.
மகாராணி சரி சரி என்னை கிண்டல் செய்யாதீர்கள்...இன்னும் சில நூற்றாண்டுகளில் அந்த மெகா சீரியல் முடிந்துவிடுமே என்று கவலையாக நான் இருக்கிறேன். சரி! விண்டோ மகாலெஷ்மி! உனக்கு உன் தோழி கிடைத்துவிட்டாள்! நான் கிளம்பட்டுமா? நமது அரண்மனைப் பைலட்டை வரச்சொல்லியிருந்தேன். விமானத்தில் பக்கத்து நாடு வரை சென்று சிகையலங்காரம் செய்துகொள்ளவேண்டும். சீரியல் மிச்சத்தை விமானத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொள்கிறேன்.
தோழி நம் நாட்டில் இப்போது அடுத்ததாக ஒரு செயற்கைக்கோள் விடப்போகிறார்கள் தெரியுமா?
இளவரசி எதற்கு?
தோழி நாட்டில் வேலைக்கார ரோபாட்டுகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. மேலும் அவை மனிதர்களிடமிருந்து வேலை ஏய்ப்பதையும் கற்றுக்கொண்டுவிட்டன. சென்ற வாரம்கூட இரண்டு ரோபாட்டுகள் வேலயிலிருந்து காணாமல் போய்விட்டன. இரண்டு மணிநேரம் கழித்து வந்திருக்கின்றன. எங்கே சென்றீர்கள் என்று கேட்டாலும் திமிராக பதில் சொல்கின்றனவாம்.
இளவரசி மனிதர்கள் போலவே இயந்திர மனிதர்களை உருவாக்குகிறேன் என்று உங்கள் பொறியாளர்கள் கூறிக்கொண்டிருந்தது உண்மையாகிவிட்டது. ஹாஹா....(சிரிப்பு) ஆக..அவற்றைக்கண்காணிக்க செயற்கைக்கோள் அனுப்புகிறார்கள் என்று சொல்!
தோழி அதெப்படி..பளிச்சென்று சொல்லிவிட்டீர்கள்!
இளவரசி இதென்ன பிரமாதம்..உன்னிடம் பேசிக்கொண்டே என் லேப்டாப்பில் , இன்றைய செய்திகளில் தேடினேன். கிடைத்துவிட்டது.
தோழி டெக்னாலஜி குலோத்துங்கனின் மகளா ? சும்மாவா?
இளவரசி கேலி செய்யாதே! என் அன்னைக்கு மெகா சீரியல்போல், எனக்கு இணையம்..! இது மட்டும் இருந்தால் எனக்கு உணவே தேவையில்லை!
தோழி பார்த்து...உங்களை மணக்கப்போகும் இளவரசர் இணையம் வழி வந்து இதயத்தில் அமர்ந்துவிடப்போகிறார்.!
இளவரசி : ச்சீ போடி..எப்போதும் ஏதாவது கிண்டல் செய்துகொண்டு...இதோபார் எவ்வளவு விதமான வரலாற்றுத்தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன என் மடிக்கணிணியில்...
தோழி எங்கே காட்டுங்கள்
இளவரசி இதோ பார் ! எவ்வளவு அபாரமான தகவலக்ள்....அய்யஹோ...என்னது இது ? எல்லாம் அப்படியே நிற்கிறதே. எதை க்ளிக் செய்தாலும் ஒன்றும் நிகழவில்லையே! லேப்டாப் பழுதாகிவிட்டதே... என்ன செய்வேன்..!?
காட்சி 4— அரண்மனை வளாகம்
( மன்னர் , மந்திரி, இளவரசி ,அரண்மனை சமையல்காரர் பாஸ்ட் புட் பரமன்)
மன்னர் : மந்திரி ! என்னய்யா இது! பல நாடுகளில் கேட்டாயிற்று ! அரண்மனை உபயோகத்திற்கென்று கொஞ்சம் பொன்னி அரிசி கேட்டேன். எகத்தாளமாகப்பேசுகிறார்கள்.
மந்திரி ஏன் மன்னா ? சென்ற ஆண்டு இறக்குமதி செய்த அரிசி என்னாயிற்று?
மன்னர் நாந்தான் கொஞ்சம் கூட சிக்கனமில்லாமல்...எச்சில் கையாலேயே பலமுறை காக்காய் ஓட்டிவிட்டேன். அதிலேயே பல கிலோ அரிசி போய்விட்டது.
மந்திரி சரி! கவலைப்படாதீர்கள் மன்னா ! செவ்வாய்க்கிரகத்திலிருந்தாவது அரிசியை வரவழைத்துவிடுவோம். ஆமாம்...கேட்பதற்காக கோபித்துக்கொள்ளக்கூடாது! அரசவையில் சொன்னீர்களே ! அதுபோல் நீங்களும் ஏன் பீஸா ,பர்கர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.?
மன்னர் அதை ஏன் கேட்கிறீர்? நானும் அவற்றை அள்ளி அடித்துக்கொண்டுதான் இருந்தேன். அதனால் ஏதோ ஒபிசிட்டியாம் அது வந்துவிட்டதாம்.அரண்மனை பிரதான மருத்துவர்தான் பொன்னி அரிசிச்சோறு சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.!
மந்திரி ஓ..அப்படியா?
மன்னர் என்ன நொப்படியா? நான் என்ன கதையா சொல்லிக்கொண்டிருக்கிறேன். எனக்கு வந்த நோயைப்பற்றி கவலையோடு கூறிக்கொண்டிருக்கிறேன். கதை கேட்பதுபோல் மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டிருக்கிறீர் !
மந்திரி இல்லை மன்னா! பொன்னி அரிசியை எப்படி ,,,எந்த நாட்டிலிருந்து தருவிப்பது என்பது பற்றி யோசித்துக்கொண்டிடிருக்கிறேன்.
மன்னர் நீர் யோசிக்கவே வாய்ப்பில்லையே! உமக்குத்தான் மூளையே கிடையாதே!
மந்திரி என்ன மன்னா! சிறிது நேரத்துக்குமுன் தான் ரோபோ என்றெல்லாம் கூறினீர்கள்!
மன்னர் அது ஒரு ஃப்ளோவில் கூறிவிட்டேன்...!
மந்திரி ஆ !
மன்னர் அது கிடக்கட்டும்..! அரிசியின் ஆதாரமான நெல்லாவது அண்டை நாடுகளில் கிடைக்கிறதா என்று பாருமய்யா!
மந்திரி ஒரே ஒரு நாட்டில் மட்டும் கிடைக்கிறது மன்னா..! அது அக்ரிபுரி என்ற நாடு. ! என்ன ஒரு கொடுமையென்றால் அவர்கள் நெல்லாக யாருக்கும் தரமாட்டார்கள். ஏனெனில் நெல்லாகக்கொடுத்தால் நாம் அதை பயிரிட்டு விடுவோம் என்று அரிசியாக்கிதான் அண்டை நாடுகளுக்கு சப்ளை செய்கிறார்கள்.
மன்னர் அப்போது அவர்களிடம் அரிசியை வாங்கிவிட வேண்டியதுதானே!
மந்திரி அதில்தான் மன்னா சிக்கலே இருக்கிறது! அந்த நாட்டு மன்னன் விவசாய வேந்தனுக்கு தங்கள் மீது அடங்காத கோபம்..! அதனால் எந்த உணவுப்பொருளும் நம் நாட்டுக்கு மட்டும் தரக்கூடாது என்று வியாபாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறான்.
மன்னர் ஏனாம்...!?
மந்திரி அதையும் கேட்டேன் மன்னாஅந்த மன்னனைப்போல் நாம் விவசாயத்தில் நாட்டம் கொள்ளாமல் டெக்னாலஜியை மட்டுமே வளர்த்து நாட்டின் அடிப்படைத்தேவைகளில் கோட்டை விட்டுவிட்டோமாம்!
மன்னர் : நான் என்னத்த்ய்யா கண்டேன்..! தொழில்நுட்ப உற்பத்தியைப்பெருக்கினால் நாட்டின் பொருளாதாரம் வளரும்..!
அதன் மூலம் மக்கள் எந்தப்பொருளை வேண்டுமானாலும் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று நினைத்தேன். அது ஒரு குற்றமா?
மந்திரி நான் அப்படிக்கூறவில்லை மன்னா! ஆனால் நாம் பாட்டுக்கும் கணிப்பொறி, செல்போன், டிஜிட்டல் உபகரணங்கள் மற்றும் இன்னபிற பொருட்கள் செய்யும் தொழி்ற்சாலைகளை விளைநிலங்களில் கட்டித்தள்ளினோம். அப்போதே நாட்டு விவசாய வல்லுநர்களும், அறிஞர்களும் தடுத்தார்கள். விமர்சித்தார்கள். ஆனால் நீங்கள்தான் அவர்கள் எல்லோருக்கும் விதவிதமாக தண்டனை கொடுத்தீர்கள்.
மன்னர் சரி..சரி..அவையெல்லாம் நடந்து முடிந்த கதை! பேசிக்கொண்டே உணவு உண்ணும் பகுதிக்கு வந்துவிட்டோம். நான் சாப்பிடப்போகிறேன். நீர்?
மந்திரி நீங்கள் சொன்னால் மறுக்கவா முடியும் ? சாப்பிடுகிறேன் மன்னா!
மன்னர் ம்.க்கும்.. அரண்மனை உணவில் அவதி அவதியாய்க் கைவைத்துவிட்டு அரசர் கம்ப்பெல் செய்தார் என்று ஊருக்குள் சென்று சொல்லத்தான் போகிறீர். வந்து தொலையும்..சாப்பிடலாம்.
மந்திரி ஹி..ஹி...நீங்கள்தான் மக்கள் மனமறிந்த மன்னர் !
மன்னர் சரி ..சரி..இதை அரசவையில் சொல்லும்..இங்கே தனியறையில் சொல்லி என்ன பிரயோஜனம்.! .யாரங்கே ? எவ்வளவு டெக்னாலஜி இருந்தாலும்...இந்த யாரங்கே வை மட்டும் விடமுடியவில்லையே!!
தலைமை சமையல்காரர் ஃபாஸ்ட் ஃபுட் பரமன் :
வந்தேன் மன்னா! உள்ளே இன்று வந்த உணவுப்பெட்டிகளை ப்ரிட்ஜில் வைத்த்துக்கொண்டிருந்தேன்.
மன்னர் :ஓ..புதிய தலைமை சமையல்காரர் ஃபாஸ்ட் ஃபுட் பரமனா.. அது சரி ! இப்போது, எனக்கு என்ன உணவு இருக்கிறது?
பரமன் : எல்லாவிதமான பாஸ்ட்புட் ஐட்டங்களும் உள்ளது மன்னா!
மன்னர் : அதைவிட்டால் வேறு எதுவுமே இல்லையா?
பரமன் இல்லை மன்னா! அரண்மனை அக்கவுண்ட்ஸ் ஆபீஸரிடம் சில காய்கறிகள் வாங்கச்சொல்லி பரிந்துரைத்திருந்தேன். ஆனால் அவற்றை வாங்குவது மிகவும் கடினம் என்று கூறிவிட்டார் மன்னா!
மன்னர் அப்படியா...! மந்திரியாரே ! அது என்னவென்று விசாரியும்!
மந்திரி ஆம் மன்னா..அவர் என்னிடம் இது பற்றி டிஸ்கஸ் செய்தார். காய்கறிகளும் அக்ரிபுரியிலிருந்துதான் இறக்குமதி செய்தாக வேண்டும். அது இயலாத காரியம் என்று பேசிக்கொண்டிருந்தோம்.
மன்னர் என்னய்யா இது ! பெரிய ரோதனையாகப்போய்விட்டது! சரி உமக்கு என்னன்ன சமைக்கத்தெரியும்?
பரமன் ஹி..ஹி...எல்லா பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் நன்றாக சுடவைப்பேன். எல்லா விதமான பாஸ்ட் புட்களூம் உடனுக்குடன் வதக்கித்தருவேன். இறக்குமதியான உணவுப்பெட்டிகளை பதமாக ப்ரிட்ஜில் வைப்பேன். பல்வேறு நாடுகளில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஓவன் குக்கிங் மாஸ்டர் என்று பெயர் வாங்கியிருக்கிறேன் மன்னா!
மன்னர் மொத்தத்தில் ஒன்றும் சொந்தமாக சமைக்கத்தெரியாது! இதற்கு இவ்வளவு பீற்றல்!
பரமன் அதில்லை மன்னா ! எங்கள் பாட்டனாரெல்லாம் அரிசி , காய்கறிகள் வைத்து நிறைய உணவுவகைகளை சமைத்திருக்கிறார்கள்.
மந்திரி பழம்பெருமை இப்போது எதற்கு? இப்போது மன்னர் உண்ண என்ன இருக்கிறது ? அதைக்கூறுங்கள் முதலில்..
பரமன் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட குளிர்பானங்கள், ரொட்டி, நூடுல்ஸ், ஆகியவை உள்ளன அய்யா!
மன்னர் : சரி ..இப்போதைக்கு எங்கள் இருவருக்கும் நூடுல்ஸ் கொண்டுவாருங்கள்.பரமன் சரி மன்னா!
மன்னர் அமைச்சரே..! சாப்பாடு கிடைப்பது பற்றி நினைத்தாலே எனக்கு டென்ஷனாகிறது ! பேசாமல் அக்ரிபுரி மீது படையெடுத்தால் என்ன?
மந்திரி அதற்கு வாய்ப்பே இல்லை மன்னா! அந்த நாட்டு மன்னனுக்கு படைபலமும், மக்கள் செல்வாக்கும் அதிகம்.
மன்னர் நம்மிடம்தான் அதைவிட பலம் வாய்ந்த ரோபோ படடை உள்ளதே அய்யா!
மந்திரி அதில் ஒரு சிக்கலும் உள்ளது மன்னா! நமது ரோபோ படையின் பேட்டரியைப் பிடுங்கும் சூட்சுமத்தை அந்த வீரர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் ஈஸியாக அவற்றை சாய்த்து விடுவார்கள்.
மன்னர் ஆக, ஒன்றும் செய்யமுடியாது என்பதை, சுற்றிவளைத்துக்கூறுகிறீர்.
மந்திரி ஹி..ஹி..
மன்னர் இதோ நூடுல்ஸ் வந்துவிட்டது. நன்றாக சாப்பிடும்..! நானே ஏதாவது யோசித்து முடிவெடுக்கிறேன். என்ன ஒரு தவறு இழைத்துவிட்டேன். விவசாய வல்லுனர்கள் பேச்சைக்கேட்டு கொஞ்சம் நிலத்தையாவது விட்டுவைத்திருக்கலாம். சரி நடந்ததைப்பற்றி பேசி பலனில்லை.! பரமா!
பரமன் மன்னா!
மன்னர் நூடுல்ஸுக்கு தொட்டுக்கொள்ள சாஸ் இருந்தால் கொண்டுவாரும்.!
பரமன் ஓக்கே மன்னா!
(இளவரசி ஓடி வருகிறாள்)
இளவரசி : தந்தையே ! தந்தையே!
மன்னர் : வாம்மா விண்டோ மகாலெஷ்மி..! என்னம்மா?
இளவரசி : எனது லேப்டாப் திடீரென பழுதாகிவிட்டது. எனக்கு அதிமுக்கிய மெயில் அனுப்பவேண்டிய வேலை இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை!
மன்னர் : உடனே அதை சப்ளை செய்த நிறுவனத்தின் கஸ்டமர் கேரில் கேட்கவேண்டியதுதானே!
இளவரசி : கேட்டேனே! நமக்கு வாரண்ட்டி முடிந்துவிட்டதாம். இனிமேல் சரிசெய்வதானால் பணம் கேட்கிறார்கள். அதுவும் நாளைதான் அவர்களது சர்வீஸ் எஞ்சினியரை அனுப்புவார்களாம்.
மன்னர் : அரண்மனையிலிருந்து இந்த டெக்னாலஜி குலோத்துங்கனின் மகள் பேசுகிறேன் என்று சொன்னாலுமா அப்படிச் சொன்னார்கள்!?
இளவரசி : ஆம்..! நான் அப்படிச்சொன்னபின்னால்தான் மிகவும் கொடூரமாகப்பேசினார்கள். ஆனால் இளவரசி என்பதால்,நாளை அனுப்புகிறோம். வேறொருவர் என்றால் ஒரு மாதம் கழித்துதான் சரி செய்வோம் என்றார்கள்.
மன்னர் : யோவ் மந்திரி ! என்னய்யா இது ? எவனுமே நம்மை மதிக்கமாட்டேன் என்கிறான்.
மந்திரி : மன்னா! அது அயல்நாட்டுக்காரன் நிறுவனம்! நாம் அவனிடம் ஒரு பெரிய தொகையை சேவை வரியாக வசூலித்துவிட்டோம். ஆகவே அவன் கொடுக்கும் கணிப்பொறிகளுக்கு அவன் தான் முதலாளி.. அவன் கூறியபடிதான் கஸ்டமர்கள் கேட்கவேண்டும். நாம் ஒன்றும் செய்யமுடியாது மன்னா! அதான் நாளை வந்துவிடுவதாகக்கூறியிருக்கிறார்களே!
இளவரசி அப்படியெனில்..இதற்கு வேறு வழியே இல்லையா?
மன்னர் :அமைச்சரே! உம்மைத்தான் ...என்ன விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர் !
மந்திரி : ஒரு யோசனை மன்னா!
மன்னர் : என்ன அது? கூறித்தொலையும்!
மந்திரி : இன்று காலை நாம் ஒரு கணிப்பொறியாளருக்கு தண்டனை கொடுத்தோமே!
மன்னர் என்னது? நாமா?
மந்திரி : ஸாரி மன்னா! நீங்கள் தண்டனை கொடுத்தீர்களே!
மன்னர் : ம்...ஆமாம..ஆமாம்.. அந்த வருமானவரி பார்ட்டி..! பெயர் ஏதோ...
மந்திரி :அவன் பெயர் புவன் மன்னா! அவனை அழைத்து இளவரசியின் லேப்டாப்பை ரிப்பேர் செய்யச்சொன்னால் என்ன?
மன்னர் : ஆஹா..அபாரமான யோசனை! மொபைல் மணிவாசகத்தை நான் மந்திரியாக்கியது வீண்போகவில்லை! சரி! அவனையே அழைத்து இளவரசியின் லேப்டாப்பை சரி செய்யச்சொல்லுங்கள்!
இளவ்ரசி மிக்க நன்றி தந்தையே!
(வேற வழியே இல்லை..! கண்டிப்பா தொடர்ந்தே தீரும்..!)

Thursday, September 17, 2009
டெக்னாலஜி குலோத்துங்கன் - 1
காட்சி 1 - அரண்மனை வளாகம்
( மன்னர் டெக்னாலஜி பெண்டியம் செவன் பே சேனல் குலோத்துங்கன், மந்திரி மொபைல் மணிவாசகன், சேவகர்கள்)
அரச சபைக்கான சப்தங்கள்
சேவகன் : ராஜாதி ராஜ...ராஜ பார்வை மிக்க, மைடியர் மார்த்தாண்ட... மன்னாதி மன்னர்...
மன்னர் : யேய் ! நிறுத்து எனக்கு பராக் சொல்லச்சொன்னால் என்ன இது படங்களின் பெயர்களாகச்சொல்கிறாய் அதுவும் பராக்குப்பார்த்துக் கொண்டு!
சேவகன் : ஸாரி மன்னா! டங் ஸ்லிப்பாகிவிட்டது.
அரசர் : ஜாக்கிரதை..என் வாளும் உன் கழுத்தில் ஸ்லிப்பாகி விடப்போகிறது ! ..அமைச்சர் மொபைல் மணிவாசகரே!
அமைச்சர் : சொல்லுங்கள் மன்னா!
அரசர் : என்னய்யா! இப்படி ஒரு மொக்கையை பராக் சொல்லும் வேலைக்கு நியமித்திருக்கிறீர்கள் !?
அமைச்சர் : (மனதுக்குள்) உம்மைப் போல் மொக்கை மன்னருக்கு பின்னர் என்ன பில் கேட்ஸா சேவகனாக வருவார்.
அரசர் : என்ன அங்கு முனகல்!?
அமைச்சர் : ஒன்றுமில்லை மன்னா! உங்களைப்போன்ற சிறந்த மன்னருக்கு இப்படி ஒரு சேவகனா என்று வருந்தினேன்..
அரசர் : இருக்கட்டும் இருக்கட்டும்
சேவகன் : அமைச்சரே ! இப்போ நான் மிச்சத்தை சொல்லலாமா?
அமைச்சர் : சொல்லுமய்யா! இதற்கு வேறு அனுமதி வேண்டுமா?
சேவகன் : நமது மன்னாதி மன்னர்...டெக்னாலஜி தங்கம் ..! ஈ மயில் சிங்கம்.! பெண்டியம் செவன், பே சேனல் குலோத்துங்கன் பராக் ! பராக்! பராக்!
அரசவை கூடுகிறது...
காட்சி 2 அரசவை
( மன்னர், அமைச்சர், புவன், வருமான வரி அதிகாரி )
மன்னர் : அவையில் எல்லோரும் அவரவர் கணிப்பொறி முன்னர் அமருங்கள் ! (தொண்டையைச் செருமிக்கொண்டு) ஹ்ம்..ஹ்ம்.. அமைச்சரே மாதம் முழுவதும் இன்ட்டெர்நெட், ஈ மெயில் எல்லாம் வேலை பார்க்கிறதா? எல்லோர் வீட்டு கம்ப்யூட்டரும் நன்றாகச் செயல்படுகிறதா?
அமைச்சர்: ஆமாம் மன்னா! பிரமாதமாய் வேலை செய்கிறது.! (மனதுக்குள்)அந்தக்காலத்துல எங்க பாட்டன் பூட்டனெல்லாம் மாதம் மும்மாரி மழை பொழிகிறதாங்கிற கேள்விக்குத்த்தான் பதில் சொல்லியிருக்கான். என் விதி.. இன்டெர்நெட்.. பிள்ளைப்பூச்சி மெயில். கொசுமெயில் பற்றிய கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
மன்னர் : என்னய்யா அங்கு நீண்ட முணுமுணுப்பு!?
அமைச்சர் : ஒன்றுமில்லை மன்னா !
மன்னர் : உம் கவலை எமக்குப்புரிகிறது... நான் மட்டும் என்ன விரும்பியா இந்தக்கேள்வியைக் கேட்கிறேன். இப்போதுதான் வானத்தில் மழை பொழிவது மூன்றாண்டுக்கு ஒருமுறை என்று மாறிவிட்டதே...!
அமைச்சர் : ஆம் மன்னா ! அந்தக்காலத்தில் மரங்கள் என்ற ஒரு தாவர இனம் இருந்ததாம்..! அதன் மூலம் மழை பொழிந்துகொண்டிருந்ததாம்..! இப்போதுதான் நாம் எல்லாவற்றுக்கும் இரும்புக்கம்பங்களே பயன்படுத்துகிறோமே!
மன்னர் : சரி அமைச்சரே..! அதைப்பற்றி இன்னொரு சமயத்தில் பேசுவோம்.! இப்போது நாட்டில் எல்லோரும் நன்றாக வேலை பார்த்து வருமானவரி கட்டுகிறார்களா?
அமைச்சர் : அது சம்பந்தமாகத்தான் ஒருவரை நமது வருமான வரி அலுவலர்கள் கைது செய்து அழைத்துவந்துள்ளார்கள்.!
மன்னர் : அது என்ன வழக்கு ? வருமான வரி அதிகாரி அவர்களே!
வருமானவரி அதிகாரி : மாட்சிமை தாங்கிய மன்னா ! இந்த கணிப்பொறி அலுவலர் திரு.புவன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நமக்கு வருமான வரி கட்டாமல் டபாய்த்து வருகிறார்!
மன்னர் : ஏனப்பா ! என்ன பிரச்சனை ? ஏன் வருமானவரி கட்டவில்லை?
புவன் : மன்னா ! நல்ல வருமானம் வருகிறது..ஆனால் உணவுப்பொருட்களுக்கும், பால் , எரிபொருள் என எல்லா பொருட்களுக்கும் கடுமையாக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
மன்னர் : என்னய்யா நகைச்சுவையாய் இருக்கிறது..! அரிசி கிலோ 3000 ரூபாய்க்கும், பால் ஒரு குவளை 1500 ரூபாய்க்கும், வாகன எரிபொருள் ஒரு லிட்டர் 5000 ரூபாய்க்கும் சகாய விலைக்கு வழங்கியிருக்கிறேன். இதைப்போய் அதிகமென்கிறாயே! இந்த டெக்னாலஜி குலோத்துங்கன் ஆட்சியில்தான் ஒரு கணிப்பொறி எல்லா மென்பொருட்களும் சேர்த்தே 249 ரூபாய்க்குக்கிடைக்கிறது. பிறந்த குழந்தைக்குக்கூட ஒரு செல்பேசியை இலவசமாக வழங்குகிறார்கள் என்று அண்டை நாட்டார்கள் மூக்கின்மேல் மௌஸை வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
புவன் : ஆமாம் மன்னா...வீட்டில் இரண்டு கணிப்பொறியும், எல்லா எலக்ட்ரானிக் உபகரணங்களும் உள்ளன. ஆனால் சோறு சாப்பிடத்தான் முடியவில்லை. அதான் என்னால் வருமான வரி வேறு கட்டமுடியவில்லை.
மன்னர்: மீண்டும் மீண்டும் சோற்றைப்பற்றியே பேசி என்னை மூட் அவுட் செய்கிறாயே! ஒரு நாள் முழுவதும் வெளிநாட்டு மங்கைகளுடன் இன்டெர்நெட்டில் சாட் செய்துபார்! ஒரு நிமிடம் கூட பசிக்காது. அப்படிப்பசித்தாலும் வெளிநாட்டு உணவு வகைகள் மிகவும் சீப்பாகக்கிடைக்கிறது. பீஸா , பர்கர் என்று...!
அமைச்சர் : ஆமாம் மன்னா! மிகவும் சீப்பாகக்கிடைக்கிறது. இன்று காலையில்கூட நான் ஒரு பீஸாவை முக்கி முக்கி தின்றுவிட்டுத்தான் வந்தேன். அதுவும் அமைச்சருக்காக சகாயவிலையில் ஒன்று 900 ரூபாய்க்கே தந்தார்கள்.
புவன் : அது சரி அமைச்சரே ! நீங்கள் அரசருக்கு அடுத்த நிலையில் உள்ளீர்கள் அதனால் இது சாத்தியம் என்னைப்போன்ற மாதச்சம்பளம் வாங்கும் சாமானியனுக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை. வருமானவரியும் மிகவும் அதிகமாக இருக்கிறது.
மன்னர் : என்ன சொல்கிறாய் மிஸ்டர் புவன்! என் ஆட்சியில் வருமானவரி அதிகமா? உங்களைப்போன்ற மாதச்சம்பளம் வாங்கும் மிடில்கிளாஸ் மக்கள் துன்பப்ப்டக்கூடாது என்றுதான் உங்கள் சம்பளத்தில் பிசாத்து 80 சதவீதத்தை வருமானவரியாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள இருபது சதவீதத்தை பெரிய மனதுடன் தந்து மகிழ்ந்திருக்கிறேன்.
புவன் : அதில்தான் மன்னா சிக்கல் ! இந்த சம்பளத்தாலேயே என்னால் என் குடும்பத்தைக்காக்க முடியவில்லை...இதில் என் வருமானவரி போக கிடைக்கும் 20 சதவீதத்தை வைத்து நானும் வேலைக்குப்போக முடியாத என் தந்தையும் , என் தாயும் வாழமுடியவில்லை! எனவேதான் வருமான வரியைக்கட்டவில்லை! இது என் பிரச்சனை மட்டுமல்ல ! இந்த நாட்டின் பிரச்சனை! என்னிடம் இதைத்தீர்க்க யோசனையும் உள்ளது..! அதாவது.....
மன்னர் : நிறுத்து ! எனக்கே யோசனை சொல்கிறாயா ? புரட்சி செய்கிறாயா? உனக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?
புவன் : என்ன தண்டனையாக இருந்தாலும் கொடுங்கள் மன்னா! அது மரணதண்டனையாக இருந்தால் மிகவும் மகிழ்வேன்.
அமைச்சர் : அய்ய! ஆசையைப்பாரேன். அப்படியெல்லாம் எங்கள் மன்னர் கருணைகாட்டிவிட மாட்டார். உனக்கு தண்டனையாக நமது அரண்மனையில் உள்ள எல்லா கணிப்பொறிகளையும் , செல்போன்களையும் சர்வீஸ் செய்யவேண்டும்.
மன்னர் : என்னய்யா நான் சொல்லாமலேயே அவனுக்கு தண்டனை கொடுக்கிறீர்! மேலும் அவனுக்கு எப்படி கணிப்பொறி சர்வீஸ் செய்யத்தெரியும்.?
அமைச்சர் (மன்னர் காதில் மெதுவாக) மன்னா! அவன் எப்படியும் வருமான வரியைக்கட்டப்போவதில்லை. நீங்களும் அவனை விட்டுவிடப்போவதில்லை. அதே நேரம் அவன் கணிப்பொறி குறைதீர்க்கும் நிறுவனத்தில் வேலை செய்பவன் என்று தெரிந்துதான் இவ்வாறான தண்டனைக்குப்பரிந்துரைத்தேன். மேலும் அரண்மனை கணிப்பொறிகளுக்கு ஏ எம் ஸி எடுத்த அயல் நாட்டு நிறுவனம் அதிகத்தொகை கேட்கிறது. இதுபோன்ற இளிச்சவாயர்கள் நான்கு பேர் கிடைத்தால் நாம் நம் வேலையை இலவசமாக முடித்துக்கொள்ளலாம் அல்லவா? எப்படி என் மந்திரிதந்திரம்...!
மன்னர் : அதென்ன மந்திரி தந்திரம்?
அமைச்சர் : மன்னர் சிந்தித்தால் ராஜ தந்திரம்...! மந்திரி சிந்தித்தால் மந்திரி தந்திரம்...!
மன்னர் : அடடா! அடடா! என்ன ஒரு புத்திக்கூர்மை..! இப்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் ரோபாட்டை விட நீர் சிறப்பாகச்சிந்திக்கிறீர் அய்யா!
அமைச்சர் : ஹி..ஹி..நன்றி மன்னா! அப்படியே என் இன்க்கிரிமென்ட் சம்மந்தமாக...!
மன்னர் : யாரங்கே! சென்ற வாரம் அரண்மனையில் இன்கிரிமென்ட் கேட்ட சேவகனின் வாயை வெட்டியாயிற்றா?
அமைச்சர் : அய்யய்யோ ! எனக்கு எதுவும் வேண்டாம் மன்னா!
மன்னர்: அது....! மிஸ்டர் புவன்! நீங்கள் இந்த் ஆண்டுமுழுவதும் அரண்மனை கம்ப்யூட்டர்களை இலவசமாக சர்வீஸ் செய்யவேண்டும். இதுதான் தண்டனை!
புவன்: இது அநியாயம் மன்னா! ஒரு ஆண்டுகாலம் என் குடும்பத்தை கவனிக்க யாருமில்லை! என் பெற்றோரின் கதி என்னாவது? உங்கள் அராஜகத்துக்கு முடிவு ஏற்படும்..!
மன்னர்: ரொம்ப்பேசாதே! பின்னர் தண்டனையை அதிகப்படுத்திவிடுவேன். உன் தர்ம நியாயங்களே எனக்குப்பிடிக்கவில்லை! இவனை உடனே அப்புறப்படுத்துங்கள்!
புவன்: மக்களின் நிலை அறியாத மட மன்னா ! நீயெல்லாம் விளங்கவே மாட்டாய்!
மன்னர்: யாரப்பா அங்கே ! அவனைப்பேச விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு! இழுத்துச்சென்று அந்த அடிமை ஐடி கார்டை அவன் கழுத்தில் மாட்டுங்கள்!
(தொடரும்...)
டிஸ்கி : சிறுவயதில் நாடகங்கள் மேல் கொள்ளை ஆசை.. சில நாடகங்களில் நடித்தும், எழுதியும் இருந்தாலும் நீஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு நாடக முயற்சி! தேறுமா பாப்போம்..! :)

Thursday, September 3, 2009
அறிந்து கொள்க - அடடே! புத்தகம்!
காவல்துறையின் மீது வெவ்வேறு விதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், நல்லவர்கள் இருந்துகொண்டும் , நல்லவைகளை நிகழ்த்திக்கொண்டும் இருக்கத்தான் செய்கிறாகள்!
புதுக்கோட்டை காவல் துறைத்தலைமை அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு சில ஆச்சர்யங்கள் காத்திருக்கும். தினம் ஒரு திருக்குறள் என்ற பலகை, தினம் ஒரு தமிழ் வார்த்தை என்ற பலகை, பொதுமக்கள் குறைதீர் கணிணி மையம் - மனுதாரர்கள் தங்கள் குறைகளின் அவசியத்திற்கேற்ப நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்ட ஒரு ரசீது! முறையே 15 நாட்கள், 7 நாட்கள், 24 மணிநேரம் என கெடு வைத்து பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன! உண்மையிலேயே எல்லோருக்கும் திருப்தியான நடைமுறை ! காரணம் அப்படிப்பட்ட தலைமை !
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக திரு.பா.மூர்த்தி அவர்கள் பதவிவகிக்கிறார் ! மிகவும் எளிமையான மனிதர். சிறந்த சிந்தனாவாதி! பிரச்னைகளை அதன் ஆணிவேருக்கு சென்று அறுக்கவேண்டுமென்று நினைப்பவர்! சகமனிதர்களுக்கு மதிப்பளிப்பவர்! இவரைப்போன்ற நேர்மையாளர் இருப்பதால், உண்மையில் மாவட்டத்தில் உள்ள லஞ்சம் விரும்பும் காவலர்களுக்கு சிரமம்தான்! முக்கியமாக - நல்ல படிப்பாளி!
அவர் இப்போது 'அறிந்து கொள்க' என்ற தலைப்பில் -அரசாங்க அனுமதியோடு - ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.

தமிழகக்காவல்துறையின் அறிமுகம், காவல்துறையின் செயல்பாடுகள், அதன் அதிகார வரம்பு,தெரிந்துகொள்ளவேண்டிய குற்றவியல் சட்டங்கள், விதிமுறைகள், குற்றத்தடுப்புமுறைகள், ஆகியவற்றை மிகவும் எளிய முறையில், நல்ல தமிழில் எழுதியிருக்கிறார்.அது தவிர, மகளிருக்கெதிரான குற்றங்களும் தண்டனைகளும், சாலைவிபத்து, தீ விபத்தைத் தடுக்கும் முறைகள், சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத்தடுக்க என்ன செய்யலாம்? என்றும் விளக்கியிருக்கிறார்.
கிராமங்களில்- நகரங்களில் கூட - காவல்நிலையத்துக்குச்சென்று, அங்கு அமர்ந்திருக்கும் எல்லாக்காவலரையுமே 'ஏட்டய்யா' என்றழைக்கும் கலாச்சாரம் இன்று இருக்கிறது. ஆனால் ஒரு காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்களின் உடையை வைத்தே அவர்கள் எந்தப்பதவியில் இருக்கிறார்கள் என்பதை அறியமுடியும். அதை மிகத்தெளிவாக, உடையிலும், இலச்சினையிலும் உள்ள மாற்றங்களை வைத்து, ஆய்வாளர், தலைமைக்காவலர், காவலர் என தெரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டால், அவரது உரிமைகள் என்னென்ன என்று விளக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டை சோதனை செய்யும்போது என்னனென்ன விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு அடிப்படைத் தகவல்கள் நறுக்குத்தெரித்தாற்போல் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற தகவல்கள் தெரியாமல்தான் பொதுமக்கள் ஒரு சில காவல்துறை அதிகாரிகளை தட்டிக்கேட்க முடியாமல் திணறுகிறார்கள். அதற்கு அவர்கள் தரப்பிலிருந்தே ஒரு அஸ்திரம், இந்தப்புத்தகம் !
ஒரு காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு உள்ள பணிச்சுமைக்கிடையில், இத்தகைய புத்தகம் எழுதுவது என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம்.! அதற்கு பணி மீறிய ஈடுபாடு வேண்டும். அது அவரிடம் நிறையவே இருந்திருக்கிறது. இன்னொரு சிறப்பு என்னவென்றால், இதற்கு முன் ' பெண்மை வாழ்க' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். மனிதர் படிப்பிலும் கலக்கியிருப்பார் போல, புள்ளியியலில் முதுகலைப்பட்டம், பின்னர் அதில் எம்.பில். , மேலும், பி.எல் முடித்து, இப்போது சட்டத்தில் எம்.பில் படித்துவருகிறார்.
கிழக்கு பதிப்பகத்தின், தரமான கட்டமைப்பைப்போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த 64 பக்க புத்தகத்தின் விலை எவ்வளவு தெரியுமா? - இலவசம்!
எல்லா இடத்திலும் நல்லவங்க இருக்காங்கப்பா , நாமதான் தேடித்தெரிஞ்சுக்கணும் !
Thursday, August 20, 2009
சத்தியமாகக் கடவுளைப்பார்த்தேன்.!
பயணங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை ! கவனம் கவர்பவை!
எனக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கின்றன எனக்கான பயணங்கள் ! ஆகவே ஒவ்வொரு பயணத்திலும் என் விழிப்புணர்வு (தூங்காதபோது) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்!
அது ஒரு குறுகிய தூரப் பேருந்துப் பயணம். பேருந்தில் உட்கார இடம் கிடைப்பது, அதுவும் நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் கிடைப்பது ஒரு மகிழ்வான அனுபவம். கொஞ்சம் குழப்பமானதும் கூட..! நாம் தேர்ந்தெடுத்த இருக்கையை விட இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கை பக்கத்தில் இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும்..! கூட்டமாக இருந்தால் குழப்பமே இல்லை. எந்த இருக்கை கிடைக்கிறதோ அதுதான் சொர்க்கம்! எப்போதுமே எந்த அவசரமாக இருந்தாலும், நின்றுகொண்டு பேருந்துப்பயணம் செய்வதில், எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை!
அப்படி ஒரு குழப்பம் ஏற்படாதவகையில் -சொர்க்கமாக - மூன்று பேர் அமரும் இருக்கையின் உள் ஓர இடம் எனக்குக்கிடைத்தது. மெதுவாக கூட்டம் சேர ஆரம்பித்து, பேருந்தும் நகர ஆரம்பித்தது.
வழக்கம்போல் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கியும் போனேன்.
ஒரு குலுக்கலில் , கண்விழித்தபோது கூட்டத்தில் நெருக்கிக்கொண்டு ஒரு பத்து வயதுச்சிறுவனும், அவன் இடுப்பில் மூன்றுவயதுச்சிறுவனும் இருந்தார்கள். அந்தப்பத்துவயதுச்சிறுவன் நல்ல கறுப்பாக, ஒரு பச்சை நிற பள்ளி பெயரிட்ட பனியனும், வறுமையைப்பறைசாற்றும் ஒரு ஜீன்ஸும் அணிந்திருந்தான். குட்டிச்சிறுவன் இன்னும் கறுப்பாக, ஆனால் அழகாக, ஒரு வெள்ளை டிராயரும், இரண்டு மேல் பொத்தான்கள் இல்லாத சட்டையும் அணிந்திருந்தான். இதுதவிர பெரியவனின் இன்னொரு கையில் ஒரு ஜவுளிக்கடையின் அழுக்கேறிய கட்டைப்பை இருந்தது. இவர்கள், தன் உடல்நலமில்லாத தாயுடன் வந்திருந்தார்கள். தாய் என் அருகில் நின்றிருந்தாள். சிறுவன் எனக்கு முன் இருக்கையின் அருகில் நின்றுகொண்டிருந்தான்.
அப்போதுதான் எனக்கு முன் இருக்கைப்பயணியை கவனித்தேன்.
அவள் ஒரு கல்லூரி மாணவி, சுடிதார் அணிந்துகொண்டு, ஒரு சிறு பையை வைத்துக்கொண்டு, காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இருந்தாள். அது செல்போனாக இருக்கலாம், ஐ பாடாகவும் இருக்கலாம்!
இப்போது அந்த பெரிய சிறுவன் கூறினான்..
டேய்! தம்பி! வழுக்குதுடா..!
டேய் தம்பி! வலிக்குதுடா ..!
அவன் வயதுக்கு அந்தக்குட்டிச்சிறுவனை தூக்கி வைத்துக்கொண்டு ஓடும்,-நம்மூர் சாலையில் ஆடும்- பேருந்தில் நிற்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.! இதை நான் நினைத்துக்கொண்டிருக்கும்போதே...
அவன் அந்தப்பெண்ணிடம்..
அக்கா! தம்பியை உக்கார வைச்சுக்கிறீங்களா? -என்று கேட்க,
ஹெட்போனை காதிலிருந்து எடுத்து அவன் சொன்னதை மறுபடியும் கேட்டு, பின்னர் ஆக்ரோஷமாக மறுத்தாள்..அவளது முழு முக அசைவும் தெரியாவிடினும், திரும்பிச்சுளித்ததை தெளிவாக கவனித்தேன். என்ன பொண்ணு இவள்!? ஒரு சின்னப்பையன் இப்படிக்கேட்கிறான். கூப்பிட்டு வைத்துக்கொள்ளாமல் , பெரிய அலம்பல் பண்ணுகிறாளே? என்று வருந்தினேன்.
எனக்கென்னமோ குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரிப் பார்க்கத்தோன்றும். ஆகவே , அவள் மறுத்த மறுவினாடி, என்கிட்ட குடுடா..என்று கேட்டு வாங்கினேன். சில நெருக்கல்களுக்குப்பிறகு, அந்த வானமே எல்லை அழகன், என் மடிக்கு வந்தான். ஆனால் அவனுக்கு என்னைப்பிடிக்கவில்லை. சிறிது முறைத்துக்கொண்டு, அண்ணனிடம் மழலையில் பேசிக்கொண்டே வந்தான். அம்மாவிடம் குடும்ப நிலைமைகள் பற்றியும், பள்ளியில் கேட்ட கட்டணம் பற்றியும் முதிர்ந்த மனிதனாக அந்த பத்துவயதுப்பையன் பேசிக்கொண்டு வந்தான்.
நான் இறங்கவேண்டிய நிறுத்தத்துக்கு இரண்டு நிறுத்தம் முன்னால் வண்டி வந்தபோது, அடுத்த நிறுத்தத்தில் இறங்க என் முன்னிருக்கை கல்லூரிமாணவி வேகமாக எழுந்தாள்....
டர்ர்ர்ர் !
அவள் அணிந்திருந்த சுடிதாரின் கீழ்ப்பகுதி (கால்சட்டை) மேலிருந்து கீழாக தொடைப்பகுதியில் ஒரு அடி நீளத்துக்கு கிழிந்துவிட்டது. அப்படியே அவளது தொடை மற்றும் உள்ளாடை பளீரெனத்தெரிந்தது. ஒரு வினாடி அவளுக்குத்தன் உடை கிழிந்தது தெரியவில்லை. நான் நேர் பின்னால் என்பதால் உடனே பார்த்துவிட்டேன். அவள் மானம் போவதை எண்ணிப்பதறுவதை மீறி, கடவுள் இருக்கான்ப்பா! ஒரு குழந்தையை வச்சுக்க மாட்டேன்ன்னு சொன்னவளுக்கு உடனே கூலி குடுத்துட்டான் என்று ஒரு சாத்தான் குரல் எனக்குள் ஓடியது.அவளுக்கு அருகில் இருந்த பெண் 'அய்யய்யோ! சுத்தமா கிழிஞ்சிருச்சுப்பா!' என்றாள். இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் நிறுத்தம் வந்துவிட்டது.
அந்தப்பத்துவயதுக்காரனும் பார்த்துக்கொண்டிருந்தான்.
படீரென்று தன் கட்டைப்பையைத்திறந்தான்.
ஒரு சிகப்புத்துண்டை எடுத்தான்! அவள் இடுப்பில் ஒருபக்கமாக சுற்றி, அவள் கையில் திணித்தான்.
அக்கா! ஸ்டாப்பிங் வந்துருச்சு ! எறங்குக்கா! கவலப்படாம போக்கா!
அவள் விழிகள் என்ன சொன்னதென்று எனக்குப்படிக்க முடியவில்லை!
நான் அவனையே கண்ணீர் முட்டப்பார்த்துக்கொண்டிருந்தேன்..!

Wednesday, August 12, 2009
சாருவுடன் ஒரு விமானப்பயணம்!
அந்த விமானப்பயணம் திடீரென்று நிகழ்ந்தது.
ஒரு அவசரவேலைக்காக சென்னை வரவேண்டியிருந்ததால்,
இருக்கும் 4 மணிநேர இடைவெளியில் பஸ்ஸிலோ, காரிலோ பயணிப்பது இயலாது என்பதாலும், அத்தனை அவதியாகச் சென்று அமைதியைக்குலைத்துக்கொள்ளாத ஆள் என்பதாலும், திடீரென்று திருச்சி விமான நிலையத்தில் நுழைந்தேன்.
சரியாக காலை 8.45க்கு ஒரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்புவதாக அங்கிருக்கும் நண்பர் அரவிந்த் சொல்ல, உடனே டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றேன். அது பன்னாட்டு விமானம். சென்னை சென்று, பின் சிங்கப்பூர் செல்லும் என்றார்கள். ஆரம்பகட்டச் சடங்குகளெல்லாம் முடிந்து, போர்டிங் பாஸ் வாங்கி அமர்ந்தபின் நம்முடன் பயணிக்கப்போகும் அன்பர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
முதல்முறையாக வெளிநாட்டுக்கு தாயைக்கூட்டிவரும் மகன்!
அந்தத்தாயின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி ! (திடீரென்று
ஈரானியப்பெண்மணி நம் அப்துல்லாவை ஹஜ்ஜுக்கு அம்மாவுடன் சென்றபோது வாழ்த்தியதை நினைத்துக்கொண்டேன்.)
புதுமணப்பெண்ணாக, பெற்றோரிடம் விடைபெற்று கணவனுடன் சிங்கையில் வாழப்போகும் ஒரு பெண்! (அவள் கண்களில்தான் எத்தனை எதிர்பார்ப்புகள்! சகோதரி உன் வாழ்வு இனிதாகட்டும்)
எந்த மூட்டைமுடிச்சுகளும் இல்லாமல் ஒரே ஒரு லேப்டாப்புடன் வெளிநாடு செல்லும் இளைஞன்! ( அவன் விமான நிலையத்தின் உள்ளே நுழையும்போதே லக்கேஜ் இல்லை. இப்படியும் எல்லா நாட்டிலும் துணிமணிகளை வைத்துக்கொண்டு வாழ ஒரு கொடுப்பினை வேண்டும்..!)
4 குழந்தைகளுடன், அதிக அளவு பெட்டிகளுடனும் மிகவும் சிரமப்பட்டு உள்ளே வந்த ஒரு பெண்! ( பாவம்.. ஒருவரிடம் லக்கேஜே இல்லை...ஒரு பெண்ணிடம் இவ்வளவு லக்கேஜ்.. உலகம் சமநிலை பெறவேண்டும்...சீர்காழி கணீரென்று மைண்ட் வாய்சில் பாடிச்சென்றார்..! :) )
அனைவரையும் சந்தேகப்பார்வையுடன் பார்த்துக்கொண்டே இருந்த ஒரு பெண்மணி (அய்யோ...ஒரு இட்லியைக்கூட இவ்வளவு சந்தேகமாகச்சாப்பிட முடியுமா என்று தோன்றினாலும்..பாவம்.எங்கோ அந்த அளவு நம்பிக்கை இழந்திருக்கிறார் என்ற நியாயமும் வந்துபோனது)
வீட்டில் என்ன பிரச்னையோ...கண்கூடாக பீறிடும் அழுகையை அடக்கிக்கொண்டே ...சிரிக்க முயற்சித்து நுழைந்த ஒரு விமானப்பணிப்பெண். (இதை வைத்து ஒரு சிறுகதையே எழுதலாம்..அந்த அளவு அற்புதமான சிரிப்பு அழுகை கலந்த கலவை அது...சுஹாஸினி மேடம்..உண்மையாவே நந்தினி சிஸ்டரைப்பாத்துட்டேன்)
இவர்களெல்லாம் போக, அவசரத்தில் ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏறும் வரிசைக்குப்பதிலாக எங்கள் வரிசையில் நின்றுவிட்டு கடைசி வினாடியில் திட்டுவாங்கிக்கொண்டே குடும்பத்தை கூட்டிச்சென்ற ஒரு ரங்கமணி ! (தலைவா! பில்கேட்ஸாவே இருந்தாலும் ...தங்கமணிகளுக்கு நம்ம தகர டப்பாதான்..இதுல இப்படி ஒரு தப்பை ..எல்லாரும் கையில சிகப்பு கலர் டிக்கெட் வச்சிருக்கும்போதே செய்யலாமா?)
அவர் அங்க என்ன செஞ்சு வச்சுருக்காருன்னே தெரியலையேம்மா! வீடெல்லாம் அலங்கோலமாக் கெடக்கும்...போனவுடனே போன் பண்ணலைன்னு கத்தாத..என்று முடிந்தவரை கத்திப்பேசிக்கொண்டிருந்த ஒரு தங்கமணி! (No male is perfect in front of his wife , especially in kitchen - நல்லா அனுபவிச்சு சொல்லியிருக்காய்ங்க! டிக்கெட் எடுத்துக்குடுத்து சூனியத்தை வைத்துக்கொள்ளும் அப்பாவி ரங்கமணி..நீ செத்தடீ இன்னும் 4 மணி நேரத்துல! )
மாப்புள ஒரு அவசரவேலை ..திடீர்ன்னு ஏர்ப்போர்ட் வந்து ப்ளைட் பிடிச்சுட்டேன். இந்தா கிளம்பிரும்..நம்ப ப்ரெண்ட்ஸ்க்கிட்டயெல்லாம் சொல்லிரு...கரெக்டா ஏர்ப்போர்ட்டுக்கு வந்திருடா..! (இதைவிட வெவரமா ப்ளைட்டுல வர்றதை பீத்திக்கவே முடியாது!...கிட்டத்தட்ட நம்பளும் அப்படித்தான்!)
விமானத்தில் ஏறினேன். நினைத்தபடியே எனக்கு ஜன்னலோர இருக்கை!
அருகில் வந்து அமர்ந்தது ஒரு அழகான ஆறுவயதுச் சிறுமி!
நன்றாகப்பேசிக்கொண்டுவந்தாள்! எங்க மாமா கல்யாணத்துக்கு வந்தோம். அப்பா முன்னாடியே ஊருக்குப்போயிட்டாங்க! நாங்க இப்பதான் போறோம். சிங்கப்பூருக்கு எத்தனை மணிக்குபோகும்?...மாமாக்கு புதுப்பொண்ணு ரொம்ப நல்லவங்க! தம்பி என்கிட்ட பாசமா இருப்பான்..அக்கா சொல்லுவான் என்று கலகலவென்று என் விமானப்பயணத்தை மிகவும் சுவாரஸ்யமானதாகவும், கொண்டாட்டமானதாகவும் மாற்றிக்கொண்டிருந்தாள்!
அவளுடைய அம்மாவும், பேசாமல் எல்லாவற்றையும் பார்த்து புன்னகைத்தபடியே, அவளது தம்பியை மடியில் வைத்துக்கொண்டே வந்தார் !
இவ்வளவு அழகாகப்பேசும் அந்தப்பெண்குழந்தையிடம் பெயர் கேட்டேன்.
தண்ணீர் குடித்துவிட்டுச்சொன்னாள்
சாரு...சாருலதா!

Thursday, August 6, 2009
இந்த வினாடி என்ன செய்கிறோம்? -ஒலிப்பதிவு
மறுபடியும் ரேடியோ...மறுபடியும் அறிவுரை மழை..!
பயன்படுமா?
இஷ்டப்பட்டவுங்க நனையலாம்!
இல்லைன்னாலும் தூறல் விடாது!
:)
|
பயன்படுமா?
Subscribe to:
Posts (Atom)
இறைவி - எண்ணங்கள் எனது !
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...
-
இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிர...
-
இன்று படத்தை முழுமையாகப்பார்த்தாகி விட்டது.அருமையாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் வேலை பார்த்தவன் என்ற முறையில் நான் எழுதினால் பாராட்டித்த...
-
இரண்டு மிக்ஸிகளைப்போட்டு ஒரு பேரீச்சை வாங்கின கதையான்னு நினைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு… மறுபடியும் ...