Monday, March 22, 2010
புன்னகைத் தூக்கு!
ஊரோரப்
புளியமரத்தில்
தூக்கில் தொங்குவேன்
நான் !
அழுதரற்றிக்
கால்பிடித்து
கழுத்திறுகல்
உறுதிசெய்து
என்
இறப்பில்
மகிழ்வான்
அவன்!
பக்கத்தில்
கண்ணீருடன்
பதைபதைப்பாள்
அவள்!
பத்தாம் நாள்
காரியத்திற்கு
பத்துநாள் இருக்கிறதே?
அதுவரை
அவள் வீட்டில்
ராத்தங்க
விடாமல்
செய்துவிட்ட
மகிழ்வொன்று
புன்னகையாய்
வெளிவந்து
என்
நாக்கை நீட்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
இறைவி - எண்ணங்கள் எனது !
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...
-
இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிர...
-
ஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...
-
இரண்டு மிக்ஸிகளைப்போட்டு ஒரு பேரீச்சை வாங்கின கதையான்னு நினைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு… மறுபடியும் ...

எப்படிங்க இப்படி...?வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னது இது ??? ஒண்ணுமே புரியலையே.
ReplyDeleteநன்றி மதுரை சரவணன்!
ReplyDeleteபுரியலையா? அப்படின்னா கட்டாயம் இது கவிதைதான்..! :))
ReplyDeleteரோமியோ ஜி!
இப்ப புரியுதா பாருங்க!
கணவனின் நடவடிக்கையால்,
தூக்கில் தொங்கும் மனைவி..!
தான் இறந்த பத்து நாட்களில்
அவன், இன்னொருத்தி
வீட்டுக்குப் போகமாட்டான்
என்ற மகிழ்வுடன்!
இதே கவிதையை வைஸ் வெர்ஸாவாக போட்டாலும் சரியாகத்தான் இருக்கும் ஜி.
ReplyDeleteபயம்ம்ம்ம்ம்மா இருக்கு.
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க.
வாங்க கேபிள் ஜி!
ReplyDeleteஆமாம்..! சரிதான்..!
வாங்க விக்னேஷ்வரி!
ReplyDeleteமிக்க நன்றிங்க!
ஆஹா.. கவிதைக்கு உடனுக்குடன் விளக்கவுரையும், பொழிவுரையையும் தெரிவித்த அண்ணன் கவிஞர் சுரேகா வாழ்க..!
ReplyDeleteநல்லா இருக்கு சுரேகா
ReplyDeleteவாங்க உண்மைத்தமிழன் நட்சத்திரமே!
ReplyDeleteநான் உங்களுக்கு அண்ணனா.....????
டொம்.....!!!!!
வாங்க ட்டி.வி.ஆர்.சார்!
ReplyDeleteமிக்க நன்றி!
http://pudugaithendral.blogspot.com/2010/03/blog-post_5598.html
ReplyDeletethodar pathivuku koopitruken
யாருக்கு இந்தக்கவிதை! படு பயங்கரமா இருக்கு!
ReplyDelete:)
ReplyDeleteவாவ்...இதை இப்படி கூட சொல்ல முடியுமா...நல்லா இருக்குங்க
ReplyDeleteவாங்க புதுகைத்தென்றல்..!
ReplyDeleteபாத்துருவோம்!
வாங்க சாந்தி லெட்சுமணன்!
ReplyDeleteகிராமங்களில், மனைவியை பகிரங்கமாக ஒதுக்கும் கணவர்களுக்குத்தான்!
//பயங்கரமா இருக்கு!//
அப்படியா? என்ன செய்றது? :))
வாய்யா சிவா!
ReplyDeleteஇதுக்கும் சிரிப்பா?
வாங்க அப்பாவி தங்கமணி!
ReplyDeleteமிக்க நன்றிங்க!
நான் முதலில் ஒரு ஆணின் மனவெளிப்பாடாக படித்துவிட்டேன்.. இரண்டாம் முறை வாசிக்கும் போது புரிந்தது..
ReplyDeleteஅருமையாக வந்திருக்கிறது.. சூப்பர் சார்..
jakathish thuthukuti
ReplyDelete