Friday, June 25, 2010
ஒதுங்கிய காவல்!
அய்யனாரே! என்று
சொல்லி படையல்
படைக்கும்போதும்,
வாகனங்களை நிறுத்தி
பாதுகாப்பு
கேட்கும்போதும்,
என்றாவது ஒருநாள்
ஊருக்குள்
அழைப்பார்கள்
என்றுதான் நானும்
நம்பிப்போய்
நின்றுவந்தேன்.
காவல் தெய்வம்
என்று
கவனமாய்த்
தள்ளிவைத்து,
ஊர்வலத்தில்
வர இயலா
உருவத்தைக்
கொடுத்துவிட்டு,
குதிரையொன்றை
நிற்கவைத்து,
கூரைகூடக் கட்டாமல்
கொண்டாடி நடிக்கிறார்கள்.
ஒதுக்க வேண்டுமென்று
முடிவெடுத்தால்
சாமியென்ன? மனிதனென்ன?
Subscribe to:
Post Comments (Atom)
இறைவி - எண்ணங்கள் எனது !
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் எ...
-
இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிர...
-
ஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...
-
இரண்டு மிக்ஸிகளைப்போட்டு ஒரு பேரீச்சை வாங்கின கதையான்னு நினைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டு… மறுபடியும் ...

அப்புறம் சாமியும் இட ஒதுக்கீடு கேட்கலாம்!
ReplyDeleteகவிதை காவலாய் நிற்கிறது.
ஈஸியா புரியுது அதனால இது கவிதைன்னு சொல்லமுடியாது அண்ணே .. ஹி ஹி ஹி
ReplyDeleteகவிதை அருமை
ReplyDeleteவாங்க சி.கருணாகரசு!
ReplyDeleteவாங்க ரோமியோ!
ReplyDeleteஆஹா..இது கவிதை இல்லையா!
வரிகளை மாத்திப்போட்டா சரி பண்ணிடலாமா? :)
அய்யய்யே, இப்பிடியா தெளிவா எழுதறது, இதையவே என்டர் கவிதையா எழுதுனா,
ReplyDeleteபடையல்
வாசம்
நாசிவரை.
வண்டி
முன்னே போக
என்னை அழை.
காத்திருந்தேன்
அழைப்பு வரும்
ஊருக்கு உள்ளே
உலவ ஒரு நாள்.
காவலனாம்,
கண்ணியமாக
கட்டிய குதிரைமேல்
கண்ணிமைக்காமல்
காத்திரு என்றனர்.
எங்கள் ஊரில்
எல்லாருக்கும்
எல்லைகள் உண்டு.
!!!!!!!!!!!!!!!!!
எப்பூடி......